உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

125

படும்? எனின், வெண்பா இனத்துள்ளும் வேற்றுத்தளை விரவாது விடல் வேண்டும். 'வெள்ளை' என்பதனால் வெண் பாவே கொள்ளப்படுவது எனின், பாவாய் வேறாகிய ஆசிரியம் கலி, வஞ்சி என்றிவற்றிற் பிறதளை விரவும் என்பது அல்லது, இனத்திற் பிறதளை விரவும் என்பது பெறப்படாது. 'மேலைச் சேரிக் கோழி வென்றது,' என்றால், 'கீழைச் சேரிக் கோழி ஓடிற்று,' என்பதல்லது, ஏனைச்சேரிக் கோழி வென்றது; ஓடிற்று' என்பது பெறலாகாது; அவ்வாறே போலவும், 'முக்கட் கூட்ட ம் களவிற் கில்லை,' என்றால், ‘களவின் வேறாகிய கற்பிற்கு உண்டு,' என்பதல்லது, 'கைக்கிளை, பெருந்திணை என்பன வற்றுள் உண்டு; இல்லை, என்பது பெறப்படாது; அவ்வாறே போலவும்,' என்று கடாவும் மாணாக்கனைக் குறித்து, 'வெண்பா வொழித்து அல்லாப் பாவும், பாவினமும், வெண்பா இனமும் பிற தளை விரவும்,' என்பது அறிவித்தற்கு,

“வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்.

என்பது சொல்ல வேண்டும் எனக் கொள்க. ‘அஃதே எனின்,

‘வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன தளையும் மயங்கியும் வழங்கும்

என்றாலும் குறித்த பொருளைக் கொண்டு நிற்கும்; ‘எல்லாம் என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?' எனின், பெருநூல் மருவா ஒரு சாராரும், சான்றோர் செய்யுட்டன்மை அறியா தோரும் ‘நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் பிற தளையும் வெண்பாவினுள் அருகி வரும்' என்பார் உளராயினும், 'அவ்வாறு வரின், வெண்பா அழியும், செப்பலோசை தழுவி நில்லாது ஆகலின்,' என்று மறுத்தார் காக்கைபாடினியார் முதலிய மாப்பெரும் புலவர்; அவரது துணிபே இந்நூலுள்ளும் துணிபு, என்று யாப்புறுத்தற்கு வேண்டப்பட்டது எனக் கொள்க.

66

(நேரிசை வெண்பா)

'குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி நிலாவணங்கு *நேர்மணல்மேல் நின்று - *புலாவுணங்கல் கொள்ளும்புட் காக்கின்ற *கோயின்மையோ நீபிறர துள்ளம் *புகாப்ப துரை”

யா.கா.38. மேற்.

(பா. வே)*வெண்மணன்மேல். *புலாலுணங்கல். *கோவின்மையோ *புக் கியாப்ப.