உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

முதல் நான்கு அடிகள்

உச.

குறளடி சிந்தடி இருசீர் முச்சீர்;

அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர்;

நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே.

'இஃது என் நுதலிற்றோ?' எனின், மேல் அதிகாரம் பாரித்த ஐந்தடியுள்ளும் முதல் நான்கு அடியும் உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) ள்) ‘குறளடி, சிந்தடி' என்றும், அதன் கீழ் ‘ இருசீர், முச்சீர்' என்றும் ; அளவடி, நெடிலடி, என்றும், அதன் கீழ் 'நாற்சீர், ஐஞ்சீர்' என்றும் இவ்வாறு நிரல்நிறை வகையால் நிறுவி, இரு சீரானே வந்தது குறளடி என்றும், முச்சீரானே எ வந்தது சிந்தடி என்றும், நாற்சீரானே வந்தது அளவடி என்றும், ஐஞ்சீரானே வந்தது நெடிலடி என்றும் இவ்வாறு கொண்டு வழங்குக என்றவாறு.

இருசீர் குறளடி ; சிந்தடி முச்சீர்; அளவடி நாற்சீர் ; அறுசீ ரதனின் இழிப நெடிலடி என்றிசி னோரே”

என்றார் காக்கைபாடினியார்.

இச்சூத்திரத்துள்

“நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே'

என்பது

ல்லாவிடினும் நிரல் நிறைப்

பொருள்

கோளேயாம்;

“ஐ ஒள என்னும்ஆயீ ரெழுத்திற் கிகர உகரம் இசைநிறை வாகும்'

தொல், எழுத். 42

என்றாற்போல. ‘பெயர்த்தும் அதனை எடுத்து ஓதல் வேண்டியது என்னை?' எனின், ‘நாற்சீரடி சிறப்புடைத்து ; அதனை ‘நேரடி’ என்றும், ‘அளவடி' என்றும் வழங்குப, என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது எனக் கொள்க.

“நாற்சீர் கொண்டது நேரடி ; அதுவே

தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப

99

என்றார் நற்றத்தனாரும் எனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு.

(வஞ்சித் துறை)

16

‘திரைத்த சாலிகை நிரைத்த போல் "நிரந்

1. சுருங்கிய கவசத்தை, 2. வரிசையாய்.