உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

131

திரைப்ப தேன்களே

விரைக்கொள் மாலையாய்!’

இது குறளடியான் வந்த செய்யுள்.

16

(வஞ்சி விருத்தம்)

"இருது வேற்றுமை இன்மையால்

2சுருதி மேற்றுறக் கத்தினோ

டரிது வேற்றுமை யாகவே

கருது வேற்றடங் கையினாய்!”

து சிந்தடியான் வந்த செய்யுள்.

3

(கலி விருத்தம்)

“தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் “தளிந்தன சுனையும் 5வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில °தவள மாடமே'

99

இஃது அளவடியான் வந்த செய்யுள்.

(கலி நிலைத் துறை)

சூளாமணி. 744

சூளாமணி. 742

“வென்றான் வினையின் *தொகையாய் விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின்ஒழி யாது முற்றும்

சென்றான் திகழும் சுடர்சூழ்ஒளி மூர்த்தி யாகி

சூளாமணி, 49

நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்” - சூளாமணி. 1

இது நெடிலடியான் வந்த செய்யுள். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

(உ)

கழிநெடிலடி

உரு.

கழிநெடி லடியே கசடறக் கிளப்பின்

அறுசீர் முதலா ஐயிரண் டீறா

வருவன பிறவும் வகுத்தனர் கொளலே.

என்பது என் நுதலிற்றோ?' எனின், கழிநெடிலடி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) கழிநெடிலடியே கசடு அறக் கிளப்பின் அறுசீர் முதலா ஐயிரண்டு ஈறா வருவன- கழிநெடிலடி என்பது ஐயுறவு தீர உரைக்குங்கால் அறுசீர் முதலா ஒன்றுதலைச் சிறந்து பத்துச்

1.

பருவம். 2. வேதம். 3.கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஊறிய சுவையான நீர். 4. முதிர்ந்தன. 5. தேன். 6. வெண்மை.

(பா. வே) *தொகையாய.