உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

'இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடென்றார்; அக்காட்டுள் அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவும் உரைத்தனரே!

“கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னரூஉந் தகையவே காடென்றார் ; அக்காட்டுள் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே!”

  • எனவாங்கு,

(தனிச்சொல்)

143

2

M

3

(சுரிதகம்)

66

“இனைநல முடைய கானம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர் ; மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன;

நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே

எனக் 'கலிப்பா அளவடியான் வந்தவாறு.

பாவினங்களுக்கு உரிய அடி

உ.அ. பாவினம் எல்லா அடியினும் நடக்கும்.

கலித்தொகை 11 (ரு)

'இஃது என் நுதலிற்றோ?' எனின், பொது வகையாற் பாவினங்கட்கு அடி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) குறளடி முதலிய எல்லா அடியானும் பாவினங்கள் நடக்கும் என்றவாறு.

உம்மை, முற்றும்மை, இன்ன பாவின் இனம், இன்ன அடி யால் நடக்கும் என்று சிறப்பித்துப் போக்கிச் செய்யுள் ஓத்துள்ளே கூறுதும்.

பிறரும் இவ்வாறு கூறினார். என்னை?

'விருத்தம் துறையொடு தாழிசை என்றா இனச்செய்யுள் எல்லா அடியினும் நடக்கும்”

என்றார் காக்கைபாடினியார்.

1. “இஃது ஐந்தடித்தரவும், நாலடித் தாழிசையும் அசைநிலையாகிய அடைநிலைக் கிளவியும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக் கலி” - நச்.

(பா.வே)*அதனால்