உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

66

"ஆசிரி யப்பா வெண்பா கலியென

மூவகைப் பாவும் நேரடிக் குரிய”

என்றார் நற்றத்தனார்.

“வஞ்சி அல்லா மூவகைப் பாவும் எஞ்சுதல் இலவே நாற்சீர் அடிவகை என்றார் சிறுகாக்கைபாடினியார்'

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(நேரிசை வெண்பா)

“அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்குற் கன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ- அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென் றஞ்சிப்பின் வாங்கும் அடி!”

என வெண்பா அளவடியான் வந்தவாறு.

(நேரிசை ஆசிரியப்பா)

“நிலத்தினும் பெரிதே ; வானினும் உயர்ந்தன்று; நீரினு மாரள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" என ஆசிரியப்பா அளவடியான் வந்தவாறு.

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)

(தரவு)

-

நாலடியார் 396

குறுந்தொகை. 3

“அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் *சென்றநம் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் ! வலிப்பல்யான் கேஎளினி.’

(தாழிசை)

“அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் ! காடென்றார்; அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே!'

(பா.வே) *பெயர்ந்தநங்.

1