உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

141

குறள் ஆ சிரியப்பாவின் இடையடி இரண்டும் பலவும் இருசீரடியும் முச்சீரடியானும் வரும் எனக் கொள்க.

'தன்' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஆசிரிய விருத்தமும் கலித்துறையும் ஒழித்து, மூன்று பாவினமும் பெரும்பான்மையும் நாற்சீரடியான் வரும் எனக் கொள்க.

‘அவை’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஒருசார் ஆசிரிய அடியும் கலியடியும் ஐஞ்சீரான் அருகி வருவனவும் உளவெனக் கொள்க. அவை போக்கி, 'மிக்கும் குறைந்தும்’ (யா. வி. 93) என்னும் சூத்திரத்துட் காட்டுதும்.

‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்’ என்பவாகலின் இவ்வாறு கூறப்பட்டது.

பிறரும் இவ்வாறு இவற்றிற்கு அடிவகுத்து உரைத்தார்

என்னை?

"ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும்

நாற்சீர் அடியால் நடைபெற் றனவே”

"சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி உண்டென் றறைப உணர்ந்திசி னோரே”

என்றார் காக்கைபாடினியார்.

66

இருசீர் அடியும் முச்சீர் அடியும் வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே

“அல்லாப் பாவின் அடிவகை தெரியின்

எல்லாம் நாற்சீர் அல்லடி இயலா;

இறுதியும் அயலும் இடையும் முச்சீர்

பெறுதியும்* வரையார் வெள்ளைமுதல் மூன்றும்”

என்றார் நீர்மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர்

(மயேச்சுரர்)

66

இரண்டிலும் மூன்றினும் வஞ்சி ஆகும்;

நாற்சீர் அடியாற் பாப்பிற மூன்றே’

என்றார் அவிநயனார்.

“ஆசிரி யத்தொடு வெள்ளையும் கலியும் நேரடி தன்னால் நிலைபெற நிற்கும்”

என்றார் பல்காயனார்.

(பா.வே.) *பெறுதலும்.