உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

140

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கலங்கஞர் எய்தி *விடுப்பவும்

சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே”

எனவும்,

“பரலத்தம் செலவிவளொடு படுமாயின் இரவத்தை நடைவேண்டா இனிநனியென நஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர் சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும் ஆங்கட் டெவிட்டினர் கொல்லோ

எனவாங்கு,

நொதுமலர் வேண்டி நின்னோடு

மதுகர முற்ற ஆடவர் தாமே”

6 எனவும்

- யா. வி. 90. மேற்

- யா. வி. 90. மேற்

வை சிந்தடியான் வந்த வஞ்சிப்பா. பிறவும் அன்ன.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா அடிகள்

உஎ. கலியோடு வெண்பா அகவல் கூறிய

அளவடி தன்னால் நடக்குமன் அவையே

இஃது என் நுதலிற்றோ?' எனின், மேல் ஒழிந்த மூன்று பாவிற்கும் உரிய அடி உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) கலிப்பாவும் வெண்பாவும் ஆசிரியப்பாவும் மேற்

சொல்லப்பட்ட அளவடியால் நடக்கும் என்றவாறு.

“அகவல்” என்பது, ‘ஆசிரியம்' என்றவாறு. என்னை?

“அகவல் என்ப தாசிரியப் பாவே'

என்றார் சங்கயாப்பு உடையார் ஆகலின்.

வெண்பா அகவல் கலி’ என்னாது, 'கலியொடு வெண்பா அகவல்' தலை தடுமாற்றம் தந்துபுணர்த் துரைத்ததனால், கலியுள் 'அம்போ தரங்க உறுப்புச் சில இருசீர் அடி யாலும் முச்சீர் அடியாலும் வரும் ; அராக உறுப்பு நாற்சீரடியின் மிக்கு வரும்,' எனக் கொள்க. அவை போக்கிக் கலிப்பாச் சொல்லும் வழிச் சொல்லுதும்.

66

"கூறிய என்று மிகுத்துச் சொல்லிய அதனால், வெண்பா வின் ஈற்றடியும், நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயல் அடியும், கலிவெண்பாவின் ஈற்றடியும் முச்சீரான் வரும்; இணைக்

1. நீர் அலை. தோன்றுமிடத்துப் பெரிதாக இருந்து கரை சாரச் சாரக் குறைந்து வருவது அலையின் இயல்பு. அவ்வியல்புடையது அம்போதரங்கம் எனக் காரணக் குறியாயிற்று. “நீர்த் திரைபோல் மரபொன்று நேரடி முச்சீர் குறள் நடுவே மடுப்பின் அது அம்போ தரங்கம்”

யா. கா. 30.