உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஙுச.

யாப்பருங்கலம்

தொடையின் வகை

மோனை எதுகை முரணியை பளபெடை

பாதம் இணையே பொழிப்போ டொரூஉத்தொடை கூழை கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம்

சீரிய முற்றொடு சிவணுமார் அவையே.

66

161

இஃது என் நுதலிற்றோ?' எனின், ஒருசார்த் தொடைகளது பெயரும், அவற்றின் விகற்பமும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, என்றிவை ஐந்தும், அடி, 'இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என இவற்றொடு பொருந்தி, அவை ஒரோவொன்று எட்டுப் பாகுபாட்டைச் சொல்லும் என்றவாறு.

‘பாதம்' என்பது, ‘அடி’ என்றவாறு இணையே' என்ற வழி ஏகாரம் எண்ணேகாரம். ‘கதுவாய் மிசையதூஉம் கீழதூஉம் என்பது, ‘மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்' என்றவாறு. ‘சிவணுதல்' என்பது, ‘பொருந்துதல்' என்றவாறு. என்னை?

“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” தொல். எழுத்து. 46 என்றாற்போலக் கொள்க. ‘மார்’ என்பது இடைச்சொல். ‘அவை’ என்பது சுட்டுச்சொல், 'அவையே' என்பதில் ஏகாரம் ஈற்றசை; தேற்றேகாரம் எனினும் அமையும்.

இனி, அவை கூட்டி வழங்குமாறு:

அடி மோனை, இணை மோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்று மோனை - என மோனையோடு கூட்டி வழங்கினவாறு.

அடி எதுகை, இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்று எதுகை என எதுகையோடு கூட்டி வழங்கினவாறு.

அடி முரண், இணை முரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண் கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் - என முரணோடு கூட்டி வழங்கினவாறு.

1. “இருசீர் மிசையிணை யாகும்; பொழிப்பிடை யிட்டொரூஉவாம் இருசீர் இடையிட்ட தீறலி கூழை முதலிறுவாய் வருசீர் அயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்

வருசீர் முழுவது மொன்றின்முற் றாமென்ப மற்றவையே”

யா. கா. 19.