உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.தொடை ஓத்து

தொடை தோன்றுமாறு

33. தொடையே அடியிரண் டியையத் தோன்றும்.

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன

பெயர்த்தோ?'

எனின், அடியினால் தொடை ஆமாறு உணர்த்திற்று ஆகலான், 'தொடை ஓத்து’ என்னும் பெயர்த்து.

66

இச்சூத்திரம் என் நுதலிற்றோ?' எனின், பொது வகையால் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) தொடை என்று சொல்லப்படுவது, அடி இரண்டு இயைந்தவழிப் பெறப்படும் என்றவாறு.

‘தொடையே' என்பதில் ஏகாரம் பிரிநிலை. 'எற்றிற்பிரிக்கப் பட்டதோ?' எனின்,

66

'எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ

டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே”

என்பதனிற் பிரிக்கப்பட்டது.

பிறரும் இவ்வாறு சொன்னார். என்னை?

“தொடையெனப் படுவ தடைவகை தெரியின், எழுத்தொடு சொற்பொருள் என்றிவை மூன்றில் நிரல்பட வந்த நெறிமைய தாகி

அடியோ டடியிடை யாப்புற நிற்கும்

முடிவின தென்ப முழுதுணர்ந் தோரே”

என்றார் காக்கைபாடினியார்.

66

“அடுத்த அடியிரண் டியாவகைப் பாவினும்

  • தொடுத்து வழங்கலின் தொடையெனப் படுமே”

_

யா. வி. 1

என்றார் வாம மேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர் (மயேச்சுரர்)

தொடைக்கு உதாரணம் போக்கிச் சொல்லுதும்.

(க)

(பா. வே) *தொடுத்தனர் வழங்கலின்.