உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

163

ஆதியெழுத்தே' என்றவழி ஏகார விதப்பினால், ‘ஆதிச் சொல் அடிதோறும் ஒன்றி வரத் தொடுப்பது சிறப்புடைத்து,' எனக் கொள்க. “ஆதியெழுத்தே அடிதொறும் ஆதிக்கண் வரின்' எனச் சிறப்பியாது, பொது வகையாற் கூறிற்றாகலின், முதலடி முதற்கண் வந்த எழுத்து அடிதோறும் இறுதிக்கண் வரினும், டைக்கண்வரினும், முதற்கண் வரினும் அடி மோனைத் தொடையாம் பிற,' எனின், அற்றன்று; சூத்திரத்துள் ‘ஆதியெழுத்து' என்று சொல்லப்பட்டது ஆகலின், அதனோடு சார்த்தி, ‘ஆதி எழுத்தே அடிதோறும் ஆதிக்கண் வரின்' என்று இவ்வாறே கொள்ளப்படும். என்னை?

"வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் 1தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே’

எனவும்,

"வேற்றுமை இன்றியும் இடமுத லாவறிந் தேற்பன பொதுவின் இசைப்பினும் இழுக்கா”

எனவும்,

“கேட்டமொழி ஒழித்துக் கேளாக் கிளவியொடு கூட்டியுரை கொளுத்தல் கோட்பா டன்றே

6 எனவும்,

“அடிமுதல் ஓரெழுத் தடிமுதற் றொடையே” எனவும் சொன்னார் பிறரும் ஆகலின்.

66

‘அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே, (யா.வி. 41) என்பதன் காறும், ‘அடிதோறும்' என்பதும் ‘முதல்' என்பதும் அதிகாரம் செலுத்தி உரைக்க.

1.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“மாவும் புள்ளும் *வதியிற் படர

மாநீர் விரிந்த பூவும் கூம்ப

மாலை தொடுத்த கோதையும் கமழ

மாலை வந்த வாடை

3மாயோள் இன்னுயிர்ப் 'புறத்திறுத் தற்றே”

- யா.வி. 37.மேற்

யா. கா. 18. 41. மேற்

தெளிய. 2. அறிவுறுத்தல். 3. மாமைநிறத்தையுடையோள். 4. முற்றுகை இடுதல்.

(பா. வே) பதிவயிற்; வதுவையிற். வதி - வழி.

1. மாமை நிறத்தையுடையோன்

2. முற்றுகை இடுதல்