உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத் தமையான், அடிமோனை. அடிமோனை. சீர்தோறும் வந்த எழுத்தே முறையான் வந்தால் தொடை விகற்பமாம். வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

66

அணிமலர் அசோகின் தளிர்நலம் 'கவற்றி

2அரிற்குரற் கிண்கிணி அரற்றும் சீரடி

அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி

அகன்ற அல்குல் அம்நுண் மருங்குல்

4

அரும்பிய கொங்கை "அவ்வளை அமைத்தோள் 5அவிர்மதி அனைய திரு நுதல் அரிவை அயில்வேல் °அனுக்கி அம்பலைத்(து) அமர்த்த கருங்கயல் நெடுங்கண் நோக்கமென்

திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே!”

(இணை)

(பொழிப்பு)

(ஒரூஉ)

(கூழை)

(மேற்கதுவாய்)

(கீழ்க்கதுவாய்)

(முற்று)

- யா. கா. 20. மேற்.

20.மேற்.

இதனுள் இணை மோனை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க.

அடியெதுகைத் தொடை

ஙுசு. இரண்டாம் எழுத்தொன் றியைவதே எதுகை.

(151)

'இஃது என் நுதலிற்றோ?" எனின், அடி எதுகை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ‘அடியெதுகை' எனப்படும் என்றவாறு.

'இரண்டாவது இயைவது எதுகை.' என்றாலும், ‘இரண்டாம் எழுத்து' என்பது பெறலாம், அதிகார வசத்தானும், பிறரும், “முதலெழுத் தொன்றி முடிவது மோனை;

66

ஏனைய தொன்றின் எதுகைத் தொடையே”

என்றார் ஆகலானும் ; பெயர்த்தும் ‘எழுத்து' என்று சொல்ல வேண்டியது என்னை?' எனின், “அடிக்கு எழுத்து எண்ணுமாறே போலாது, தொடைக்கு எல்லா எழுத்தும் கொள்ளப்படும்’ என்பது அறிவித்தற்குச் சொல்லப்பட்டது.

1. வருந்தச் செய்து. 2. தவளைபோல் ஒலிக்கும். 3. அழகிய வளையல். 4. மூங்கில். 5. விளங்கிய முழுமதி. 6. வருத்தி.

7. அடிக்கு எழுத்து எண்ணுங்கால் ஒற்றெழுத்துக்களை நீக்கி, உயிர் எழுத்துக்களும் உயிர்மெய்யெழுத்துக்களுமே எண்ணிக் கொள்ளப்படும்; எண்ணப்படும் என்பதாம் (யா. வி. 25, உரை காண்க)