உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(நேரிசை வெண்பா)

“எழுத்தென் றதிகாரம் ஈண்டியலா நிற்ப எழுத்தென்று மீண்டும் இயம்பிற் - றிழுக்காமை எல்லா எழுத்தும் தொடைக்காம்; அடிக்கெழுத் தல்லா தனவுமென் றற்கு

66

وو

குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும் ஒற்றும் எனவொரு நான்கொழித்துக் - கற்றோர்

உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச் செயிரகன்ற செய்யுள் அடிக்கு

இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

165

இரண்டாம் எழுத்து ஒன்றி வரினும், முதலெழுத்தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து, 'பட்டு' என்பதற்குக் ‘கட்டு' என்பதல்லது, ‘காட்டு’ என்பது எதுகை ஆகாது; 'காட்டு' என்பதற்குப் ‘பாட்டு' என்பதல்லது ‘பட்டு' என்பது எதுகை ஆகாது; ‘அரம்' என்பதற்குப் ‘பரம்' என்பதல்லது ‘பாரம்’ என்பது எதுகை ஆகாது; ‘பாரம்' என்பதற்குக் ‘காரம்' என்பதல்லது, ‘கரம்’ என்பது எதுகை ஆகாது,' என்பது அறிவித்தற்கு 'இயைவதே’ என்றார்.

66

முதலெழுத் தளவொத் தயலெழுத் தொன்றுவ தெதுகை அதன்வழி இயையவும் பெறுமே’

எனவும்,

“முதலெழுத் தொன்றுவ மோனை; எதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அதுவொழித் தொன்றின் ஆகும் என்ப

66

யா. கா. 16. மேற்.

எனவும் சொன்னார் பல்காயனார் எனக் கொள்க. இரண்டாம் எழுத்து இயைவதே எதுகை,’ என்னாது, எதுகை,'என்னாது, 'ஒன்று' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை ?” எனின், ‘ஒருசார் ஆசிரியர், இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வந்தாலும், மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தாலும் எதுகைப்பாற்படுத்து வழங்குவர்,' என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

ம்

வரலாறு :

66

(நேரிசை ஆசிரியப்பா)

“துளியொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள் அணிகிளர் தாரோய் ! அருஞ்சுரம் நீந்தி