உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

  • வடியமை எஃகம் வலவயின் ஏந்தித்

தனியே வருதி நீயெனின்,

மையிருங் கூந்தல் உய்தலோ அரிதே!’

- யா. கா. 41.மேற்

இஃது இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றிய எதுகை. இது 'செய்யுளியல் உடையார் காட்டும் பாட்டு.

(குறள் வெண்பா)

“பவழமும் பொன்னும் குவைஇய முத்தின் திகழரும் *பீன்றபுன் னை

99

“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்'

இவை மூன்றாம் எழுத்து ஒன்றிய எதுகை.

(இன்னிசை வெண்பா)

2“ஊசி யறுகை யுறுமுத்தம் கோப்பனபோல்

மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப - மூசும்

முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதான் காண்மோ

விறக்கோடு கொண்டெறிக்கின் றேன்

யா. கா. 41. மேற்

திருக்குறள் 292

இந் நக்கீரர் வாக்கினுள் கடை யிரண்டடியும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க.

66

(நேரிசை வெண்பா)

அவிழ்ந்த *துணியசைக்கும் அம்பலமும் சீக்கும் மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் - கவிழ்ந்து நிழறுழாம் யானை நெடுமான்றேர்க் கிள்ளி கழறொழா மன்னவர்தங் கை

தண்டியலங்காரம் 21. மேற்.

இப் பொய்கை வாக்கினுள்ளும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டுகொள்க. இதனை இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றினமையால், உயிர் எதுகை என்பாரும் உளர்.

1.

2.

(இன்னிசை வெண்பா)

"மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை; இருந்த

“இது கையனார் காட்டிய பாட்டு” என்பது யா. கா. 41. மேற்.

இவ்வெண்பாவில் சிறிது வேறுபட்டுள்ள ஒரு பாடலை நக்கீரர் பாடலென விநோதரசமஞ்சிரி கூறுகிறது. தமிழறியும் பெருமான் காண்க.

(பா. வே) *வடிவமை. *பீன்றனபுன். *பீன்றபுன் *துணி யியைக்கும்.