உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“எதுகைத் தொடையால் இனம்பிற விரவினும் சிறப்புடை மோனையும் சிவணும் ஆண்டே’

எனப் பிறரும் சொன்னார்.

மேற்காட்டிய பாவினத்துள்ளும் பிறவற்றுள்ளும் எதுகைத் தொடையானே வருமாறு கண்டுகொள்க.

66

(வெளி விருத்தம்)

'ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒரு சாரார் ; கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்; ‘ஏகீர் நாகீர் ! என்செய்தும் !' என்றார் - ஒருசாரார்;'

- யா. வி. 37. 68. மேற் – யா. வி. 37, 68. மேற்

என்பது இறுதி இயைபாய் வந்ததாயினும், நெடில் எதுகையால் வந்தது.

முரணாய் வரும் பாவினமும், அளபெடையாய் வரும் பாவினமும் எதுகையிற் றீர்ந்தும் மோனையிற் றீர்ந்தும் வாரா எனக் கொள்க.

266

தலையாகு மோனையாற் பாவினம் வருமாறு:

(வஞ்சி விருத்தம்)

'கருநீலம் அணிந்த 3கதுப்பினயற்

கருநீலம் அணிந்தன கண்ணிணைகள்

கருநீல மணிக்கதிர்க் கட்டியெனக் கருநீலம் அணிந்த *கருங்குழலே”

எனக் கொள்க.

சூளாமணி. 807

மிகுதி வகையால் ய, ர, ல, ழ, என்னும் நான்குமே ஆசு என்றார் ஆயினும், *வல்லினத்தாறும், வகர ளகரமும், மெல்லினத்து *ங, ஞ, ந என்னும் மூன்றும் ஒழித்து அல்லா ஒற்றும் ஒரோ இடத்து ஆசாய் வரப்பெறும். ண, ம, ன என்னு மூன்றும் வல்லினம் சார்ந்து ஆசாகா; வகார நகார மகாரத்தோடு யைந்தும் ஆசாகா எனக் கொள்க.

இன்னும் அவ்வேகார விதப்பினால், விட்டிசை மோனையும், இடையிட்டெ யிட்டெதுகையும் கொள்ளப்படும். என்னை?

1. முரணாகவும் அளபெடையாகவும் வரினும் மோனை எதுகைகளை இன்றிவாராது என்றார்; இவையின்றி வருமோ என்றார்க்கு ஐயமறுத்தல்.

2.

கருங்குவளை 3. கூந்தல்

(பா. வே) *கருங்குழலாள். *வல்லினத்துப் பகரமும் . ங, ஞ, ண. வகார நகார தகார்.