உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

யாப்பருங்கலம்

பூக்கொடிப் பொதும்பரும் பொன்னின் ஞாழலும் தூக்கொடி கமழ்ந்துதான் றுறக்கம் ஒத்ததே”

எனவும்,

(இன்னிசை வெண்பா)

“நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் *பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டும் 'கூத்தன் புறப்பட்டக் கால்?”

1

எனவும்,

(குறட் செந்துறை)

175

சூளாமணி 35

நாலடியார் 26

66

“ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

66

ஒதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை

முதுமொழிக்காஞ்சி 1

எனவும் இவை ரகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை.

(நேரிசை வெண்பா)

ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த

பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு”

இது லகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை.

266

36

(நேரிசை வெண்பா)

அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையாம்;

"மந்தரமே போலும் மனைவாழ்க்கை-1மந்தரத்துள் வாழ்கின்றேம் !' என்று மகிழன்மின் ; வாணாளும் போகின்ற ‘பூளையே போன்று”

இது ழகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை.

நாலடியார் 118

யா. கா. 41. மேற்

இவை வை எல்லாம் எல்லாம் வரலாற்று முறைமையோடும் கூடி யைந்து இனியனவாய்க் கிடப்பனவே கொள்ளப்படும் என்க.

‘ஆண்டே' என்ற ஏகார விதப்பினால், ‘எதுகைத் தொடை யானே பாவினம் வருவது, பிற தொடையால் வருமாயினும் ; அல்லதூஉம், தலையாகு மோனையானும் வரப்பெறும்; எனக் கொள்க.

1. உயிர். 2. அழகிய பதவிநிலை. 3. மாயம். 4. மாளிகை. 5. பூளைப்பூ.

(பா. வே) *பார்க்குழிப் பெய்கிலென், பாத்துழிப் பெய்யிலென்.