உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்

என்பது தந்திர உத்தி ஆகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது. பிறரும், மோனைக்கும் எதுகைக்கும் இவ்வாறே சொன்னார்.

என்னை?

“அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை

“அஃதொழித் தொன்றின் எதுகை யாகும்" "ஆயிரு தொடைக்கும் 'கிளையெழுத் துரிய” என்றார் தொல்காப்பியனார்.

“முதலெழுத் தொன்றின் மோனை யாகும் ; அஃதொழித் தொன்றின் எதுகை யாகும்; அவ்விரு தொடைக்கும் கிளையெழுத் துரிய”

என்றார் நற்றத்தனார்.

“முதலெழுத் தொன்றின் மோனை ; எதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அதுவொழித் தொன்றின் ஆகும் என்ப”

66

இவ்விரு தொடைக்கும் கிளையெழுத் துரிய’

என்றார் பல்காயனார்.

“முதலெழுத் தொன்றி முடிவது மோனை; ஏனைய தொன்றின் எதுகைத் தொடையே ; உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் நெறிப்பட வந்தன நேரப் படுமே

என்றார் *சிறுகாக்கைபாடினியார்.

முரண் தொடை

தொல். செய். 32

- தொல். செய். 33

- தொல். செய். 34

யா. கா. 16. மேற்.

16.மேற்

ஙு அ. 2மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே அடி முரண் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) அடிதொறும் சொல்லும் பொருளும் மறுதலைப் படத் தொடுப்பது அடி முரண் தொடை எனப்படும் என்றவாறு. அம்முரண் மூன்று வகைப்படும் : அவை சொல்லால் முரணுதலும், பொருளான் முரணுதலும், சொல்லும்

பொருளும் தம்முள் முரணுதலும் என.

1. இனவெழுத்து. 2. தொல். செய். 95. ஆசிரிய மொழியாக மேற்கொள்ளப் பெற்றது. (பா. வே) *காக்கைபாடினியார்.