உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

179

இனி, ஒருசார் ஆசிரியர், அவைதாம் 'ஐந்து விகற்பத்தன என்ப. ‘அவை யாவையோ? எனின், சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும், சொல்லும் பொருளும் சொல் லொடும் பொருளொடும் முரணுதலும் என 6 வை.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற் 2பசும்புண் வார்ந்த அசும்புடைக் குருதியொடு வெள்விளி பயிற்றும் நாடன்

உழைய னாகவும் விழையுமென் நெஞ்சே'

- 3தொல். செய். 95. பேரா

இது சொல்லும் சொல்லும் முரணியது. ‘செந்தொடை என்புழிச் செய்யதாயவண்ணம் இல்லை ; ‘செம்மை' என்னும் சொல்லே. கருங்கைக் கானவன்’ என்புழியும் கருமை' என்னும் வண்ணம் இல்லை ; 'கொன்று வாழும் கை' என்பது உணர்த்தியது.

1.

(நேரிசை ஆசிரியப்பா)

"தீமேய் திறல்வரை ‘நுழைஇப் பரிமெலிந்து

7

5நீர்நசை பெறாஅ நெடுநல் யானை

வானதிர் தழங்குகுரல் °மடங்கல் ஆனாது

நிலஞ்சேர்பு முயங்கு புலஞ்சேர்ந் தந்தி

நிலவென விளக்கு நிரைவளைப் பணைத்தோள் இருளேர் ஐம்பால் ஒழியப்

பொருள்புரிந் தகறல் புரைவதோ அன்றே

"அதுவே,

சொல்லும் பொருளும் ஒருமையிற் பன்மையிற்

றம்மின் முரணும் சால்பொரு நான்காய்ச்

சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும்

ஒல்லுபு முரணலின் ஓரைந் தாகும்”

மாறனலங்காரம் 182.

2. ‘பசும்புண்' என்புழிப் பசுமையாய வண்ணம் இல்லை. ‘பசுமை என்னும் சொல்லே. 'வெள்விளி' என்புழி வெண்மையாய வண்ணம் இல்லை. அறிவின்மை சுட்டும் 'வெண்மை' என்னும்

3.

சொல்லே.

இம்மேற்கோள் பாடலின் முதல் இரண்டடிகளே ஆண்டுக் காட்டப் பெற்றுள.

4. நுழைந்து 5. நீர்வேட்கை தீரப்பெறாத, 6. சிங்கம்,

7.

கரிய ஐம்பகுப்பாகிய கூந்தலை யுடையாள். 8. தகுவதோ.