உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

து பொருளும் பொருளும் முரணியது : ‘தீ’ என்னும் பொருட்கு 'நீர்' என்னும் பொருளும், 'வான்’ என்னும் பொருட்கு ‘நிலம்’ என்னும் பொருளும், 'நிலவு' என்னும் பொருட்கு ருள்' என்னும் பொருளும் மறுதலைப்பட முரணியது. (நேரிசை ஆசிரியப்பா)

“பெருமலைக் குறுமகள் *பிறிதோர்த்து நடுங்கலிற்

சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு

நெடுநீர் பொய்கைக் 'குறுநர் தந்த

தண்பனி அவிழ்மலர் நாறுநின்

கண்பனி துடைமார் வந்தனர் நமரே”

இது சொல்லும் பொருளும் சொல்லொடு முரணியது. ‘நெடுநீர்' என்புழி ‘நெடுமை' என்னும் சொல்லும் உண்டு ; நீரும் நெடிது. ‘குறுநர்தந்த' என்புழிக் ‘குறிது’ என்னும் சொல்லுண்டு; குறும் பொருள் இல்லை.

(நேரிசை ஆசிரியப்பா)

“செந்தீ யன்ன சினத்த யானை

நீர்நசை பெறாஅக் கானற்

றேர்நசைஇ ஓடும் ~சுரனிறந் தனரே!'

இது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது. ‘செந்தீ’ என்புழிச் செம்மையும் உண்டு; “தீக்கட் செய்யது’ என்னும் சொல்லும் உண்டு ; ‘நீர் நசை பெறாஅ' என்புழிச் சொல் இல்லை ; முரணியது பொருள் எனக் கொள்க.

(நேரிசை ஆசிரியப்பா)

"ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி

செங்குரல் ’ஏனற் பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை

நல்லன் என்றும் யாமே;

தீயன் என்னுமென் தடமென் றோளே'

99

யா. வி. 43. மேற்.

இது சொல்லும் பொருளும் சொல்லொடும் பொரு ளொடும் முரணியது ‘செங்குரல்' என்புழிச் சொல்லும் உண்டு; 'செம்மை' குரற் கண்ணுமுண்டு. 'பைங்கிளி' என்புழிச் சொல்லும் உண்டு; ‘பசுமை’ கிளிக்கண்ணும் உண்டு. 'செம்மை' என்பதும்

1. பறிப்பார். 2. காடகன்றனர். 3. தினை.

(பா. வே) *பெருநிலக் *பிறிதோர்ந்து.