உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

யாப்பிற்கு அங்கமாய்ச் செய்யப்பட்ட நூல் காரிகை ஆதலின் அது யாப்பருங்கலப் புறநடை எனவும் வழங்கப் பெறுவதாயிற்று (யா.வி.பக் : 69, 134, 239, 264, 328,346, 352). புறநடையாவது ஒரு நூலுக்கு அங்கமாக அமையும் பிறிதொரு நூலாகும். அவிநயரால் செய்யப் பெற்ற யாப்பு நூலுக்கு அங்கமாக அமைந்தது 'நாலடி நாற்பது' என்பது. அதனைக் குறிப்பிடும் யாப்பருங்கல விருத்தி “நாலடி நாற்பது என்னும் புறநடை” (யா.வி பக்: 30, 31) என்பது நோக்கத்தக்கது.

மேலும்,யாப்பருங்கலம் இயற்றிய ஆசிரியரே காரிகையையும் இயற்றினார் என்பதை யாப்பருங்கல விருத்தி உரையாசிரியரும், கூறிப்போதுகின்றார்.

66

விரவியும் அருகியும்' (யா.வி. 15) என்னும் நூற்பாவுரையில் "இந்நூலுடையாரும் ‘மாஞ்சீர் கலியுட்புகா' என்னும் இதன் புறநடையானும்... விளங்கக் கூறினார் என்க” என வரைந்துள்ளார். ‘மாஞ்சீர் கலியுட்புகா' என்பது 40 ஆம் காரிகையாம்.

ல்

‘மாவாழ்சுரம்’, ‘புலிவாழ்சுரம்' என்னும் இரண்டு வஞ்சியுரிச் சீரும் உளவாக வைத்து ஒருபயன் நோக்கித் ‘தூஉ மணி' 'கெழூஉ மணி' என்று அளபெடையாக நேர்நடுவாகிய வஞ்சி யுரிச்சீர் எடுத்துக்காட்டினார் நற்றத்தனாரும் வாய்ப்பியனாரும். அதுபோல இந்நூலுடையாரும் வெண்பா இறுதிச் சீருக்கு வேறு உதாரண வாய்பாட்டால் ஓசையூட்டுதற் பொருட் டாக, குற்றியலுகரம் ஈறாகிய 'காசு' 'பிறப்பு' என்னும் வாய் பாட்டான் நேரீற்று இயற்சீருக்கு வேறு உதாரணம் எடுத்தோதினார் என்றவாறு எனச் “செப்பல் இசையன’ சையன” (57) என்னும் நூற் பாவில் விருத்தியுரை ஆசிரியர் வரைந்துள்ளார். காசு பிறப்பு என வெண்பா இறுதி வாய்பாடு கூறியது ‘நேரிசை இன்னிசைபோல' எனத் தொடங்கும் 25ஆம் காரிகையாம்.

وو

அமிதசாகரர் :

யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு நூல்களையும் இயற்றிய ஆசிரியர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர் ஆவர். அவர் பெயர் அமிர்தசாகரர், அமுத சாகரர் என்றும் குறிக்கப்பெற்றன.

யாப்பருங்கல விருத்தியின் முதற்பதிப்பு ‘அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்” என்றே வெளிப்பட்டது. அன்றியும் காரிகை, வீரசோழியம் இவற்றை எடுத்துக்காட்டி “ஆசிரியர் பெயர் அமிர்த சாகரனாரே என்பது ஐயுறவின்றித் துணியப்படும் என்றும் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். (திரு. பவானந்தம் பிள்ளை அவர்கள் பதிப்பு; 1916)