உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'வரம்பில' என்பார் கருத்து, ஈண்டு உரைத்த பாவும் தொடையும் பிறவாற்றாற் பெருகி வரும் என்பதும், இவ் வாற்றானும் பிறவாற்றானும் உறழப் பெருகும் என்பதும். அவை போக்கி,

“நிரனிறை முதலிய பொருள்கோட் பகுதியும்” என்னும் சூத்திரத்துட் கூறுப.

(நேரிசை வெண்பா)

"இணைகூழை முற்றோ டிருகதுவா யுள்ளிட்

டணையும் தொடையனைத்தும் கூட்டிக் - கணிதநூல் வல்லார் தொடைப்பெருமை நோக்கி வரம்பின்மை *சொல்லார் ; மற் றஃதன்றோ தோம்?”

செந்தொடை

௫o. செந்தொடை ஒவ்வாத் திறத்தன வாகும்.

யா.வி.95.

(கஎ)

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே

செந்தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) செந்தொடை என்பது, மேற் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமை, வேறுபடத் தொடுப்பது என்றவாறு.

“ஒன்றிய தொடையொடும் விகற்பந் தம்மொடும் ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே"

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

“சொல்லிய தொடையொடு வேறுபட் டியலின், சொல்லியற் புலவரது செந்தொடை என்ப”

என்றார் தொல்காப்பியனார்.

6

- தொல். செய். 96.

'செந்தொடை ஒவ்வாத் திறத்தன வாகும்' என்பது : நேரசைக்கு நிரையசை வந்தும், நிரையசைக்கு நேரசை வந்தும், நேரசைக்கு நேரசையேவரினும் நான்கு நேரசையும் தம்முள் ஒவ்வாதே வந்தும், நிரையசைக்கு நிரையசையே வரினும் நான்கு நிரையசையும் தம்முள் ஒவ்வாதே வந்தும், இயற்சீருக்கு உரிச்சீரே வந்தும், உரிச்சீருக்கு இயற்சீரே வந்தும், இயற்சீருக்கு இயற்சீரே வரினும் தம்முள் ஒவ்வாது வந்தும், உரிச்சீருக்கு உரிச்சீரே வரினும் தம்முள் ஒவ்வாது வந்தும், ஓரடி ஒரு வண்ணத்தால் வந்து மற்றையடி மற்றொரு வண்ணத்தால் வந்தும், அசை சீர் இசை என்னும் (பா. வே) *சொல்லாய்ந்தார் சொல்லும் தொகை.