உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

211

பொழிப்பாதி ஐந்தாவன : பொழிப்பும், ஒரூஉம், செந் தொடையும், இரட்டைத் தொடையும், நிரனிறையும் என இவை. குறிப்புத் தொடையாவது, எழுத்து அல்லாது மொழிக் குறிப்பு ஓசை. அது மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்படும் என்று வேண்டினமையான், அதனானும் தொடை கொள்ளப் படும்.

66

66

ருபத்திரண்டு தொடையாவன:

(குறள் வெண்பா)

அடிமோனை ஏனைக் கிளைமோனை என்று முடியுமாம் மோனைப் பெயர்”

(நேரிசை வெண்பா)

இரண்டாம் எழுத்தொன்றல் மூன்றாவ தொன்றால் திரண்டமைந்த சீர்முழுதும் - ஒன்றல் - முரண்டீர் கிளைவன்பால் மென்பால் இடைப்பால் உயிர்ப்பால் விளையும் எதுகையோர் எட்டு”

(COLDIT 6060T,2)

(எதுகை, 8)

“மொழியும் மொழியும் பொருளும் பொருளும்

மொழியும் பொருளும் மொழியோ - டழியாத

சொல்லும் பொருளும் பொருளொடு சொற்பொருளும்

சொல்லும் பொருளுமோர் ஐந்து”

(முரண், 5)

“பொழிப்பொரூஉச் செந்தொடை பொய்தீர் இரட்டை

அழிப்பில் நிரனிறையோ டைந்தும்- எழுத்தல்

குறிப்புத் தொடையியைபும் கொண்டுரைப்பார்க் கல்லால் நெறிப்படுமோ *நூலின் நிலை?”

(பிற தொடை,7)

ஐம்பத்தொரு நிலமாவன :

“வெள்ளை நிலம்பத் தகவல் பதினேழு

(நேரிசை வெண்பா)

துள்ளல் இருநான்கு தூங்கல்பத் - தெள்ளா

இருசீர் அடிமுச்சீர் ஐந்தாறே ழெண்சீர்

ஒருவா நிலமைம்பத் தொன்று

99

(நிலம், 51)

இவற்றால் அடியும், தொடையும், நிலமும் ஆமாறு

உரைத்துக் கொள்க.

(பா. வே) *தொன்னூல் நிலை.