உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

766

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா)

‘ஆறிரண்டோ டைந்தடியை ஐந்நான் கிருதொடையான்

மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் - தேறும்

ஒருபதின்மூ வாயிரத்தோ டொன்றூன மாகி வருமெழுநூ றென்னும் வகை

அறுநூற்று இருபத்தைந்து அடியாவன; ஆசிரிய அடி இருநூற்று அறுபத்தொன்றும், வெண்பா அடி இருநூற்று முப்பத்திரண்டும், கலியடி நூற்றுமுப்பத்திரண்டும் என தவை.

என்னை?

வை.

(நேரிசை வெண்பா)

"இருநூற் றிருமுப்பத் தொன்றகவற் கேனை

2

இருநூற்றோ டெண்ணான்கு வெள்ளைக் - கொருநூற்று முப்பத் திரண்டாம் முரற்கைக் கிவையறு நூற் றற்றமில் ஐயைந் தடி.

இருபத்திரண்டு தொடையாவன;

66

(நேரிசை வெண்பா)

"மோனை இரண்டாம்; எதுகையோர் எட்டாகும்; ஏனை முரணைந் தியைபொன்றாம்; - ஏனைப் பொழிப்பாதி ஐந்தும் குறிப்புத் தொடையோ டிழுக்கா இருபத் திரண்டு”

என இவை.

மோனை இரண்டாவன : அடிமோனையும் கிளைமோனையும்

என

அவை. வை.

எதுகை எட்டாவன : இரண்டாம் எழுத்து ஒன்றியதூஉம், மூன்றாம் எழுத்து ஒன்றியதூஉம், சீர்முழுதும் ஒன்றியதூஉம், கிளை எதுகையும், வன்பால் எதுகையும், மென்பால் எதுகையும் இடைப்பால் எதுகையும், உயிர்ப்பால் எதுகையும் என இவை.

முரண் ஐந்தாவன: சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொரு ளொடு முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லினோடும் பொருளினொடும் முரணுதலும் இவை.

1.

இயைபுத் தொடை, கிளை இன்மையின் ஒன்றே.

‘ஆறிரண்டோடைந்தடி என்றது, முறையே ஆறு இரண்டு ஐந்து என்னும் எண்களை நிறுவி நோக்க அமையும் 625 அடிகளை என்க. 2. கலிக்கு.