உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

முந்திய மோனை எதுகை அளபெடை அந்தமில் முரணே செந்தொடை இயைபே பொழிப்பே ஒரூஉவே இரட்டை என்னும் இயற்படு தொடைகள் இவைமுத லாகப் பதின்மூ வாயிரத் தறுநூ றன்றியும்

தொண்ணூற் றொன்பதென் றெண்ணினர் புலவர்

“வல்லொற்றுத் தொடர்ச்சியும் மெல்லொற்றுத் தொடர்ச்சியும் இடையொற்றுத் தொடர்ச்சியும் முறைபிறழ்ந் தியலும்”

என்றார் சங்கயாப்பு உடையார்.

"மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு

தொண்டுதலை இட்ட பத்துக்குறை எழுநூற் *றொன்றும் என்ப உணர்ந்திசி னோரே'

என்றார் தொல்காப்பியனார்.

“மோனை எதுகை முரணே அளபெடை

99

ஏனைச் செந்தொடை இயைபே பொழிப்பே ஒரூஉவே இரட்டை ஒன்பதும் பிறவும் வருவன விரிப்பின் வரம்பில என்ப

என்றார் பல்காயனார்.

209

- தொல். செய். 97.

பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்று ஒன்பது தொடை ஆமாறும், அவற்றுள் மிக்கு வருமாறும் 'உபதேச முறையான் உறழ்ந்து கொள்க.

உபதேச முறைமையால் உறழுமாறு: நான்கு பாவும் பெற்ற ஐம்பத்தொரு நிலத்தவாகி விரிந்த அறுநூற்று இருபத்தைந் தடியும், அவற்று ஒரோ அடி இருபத்திரண்டு தொடையும் பெறப்பதின் மூவாயிரத்து எழுநூற்றைம்பதாய் வரும். அவற்றுள் ஐம்பத்தொரு நிலமும் களையப் பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது தொடையாம். அடியிரண்டு இயைந்த வழித் தொடையாம் என்ப வாகலின், ஐம்பத்தொரு நிலமும்

களையப்பட்டன. என்னை?

1.

“ஆசாற் சார்ந்து அமைவுறக் கேட்கு” முறை.

(பா. வே) *றொன்பஃ தென்ப எனப் பாடங் கொண்டனர் பேராசிரியரும் நச்சினார்கினியரும்.