உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கட்டளைக் கலித்துறை)

"இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம் இருசீர் இடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீர் அயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்

வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே"

“மோனை விகற்பம் அணிமலர் மொய்த்துட னாமியைபிற் கேனை எதுகைக் கினம்பொன்னின் அன்ன இனிமுரணிற் கான விகற்பமும் சீறடிப் பேர தளபெடையின் தான விகற்பமும் தாட்டமா மரையென்ப தாழ்குழலே!” இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

யா. கா. 19.

யா. கா. 20

(கச)

செந்தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை

ச.கூ. செந்தொடை இரட்டையொ டந்தாதி எனவும்

வந்த வகையான் வழங்குமன் பெயரே.

என்பது என் நுதலிற்றோ?' எனின், இன்னும் சில தொடைகளது பெயர் வேறுபாடு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார்; அவற்றுள் இச்சூத்திரம் செந்தொடையும், இரட்டைத் தாடையும், அந்தாதித் தொடையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) செந்தொடையும், இரட்டைத் தொடையும், அந்தாதித் தொடையும் என்று பெயரிட்டு வழங்கப்படும். மற்றொழிந்த தொடைகளும், வரலாற்று முறைமையானே பெயரிட்டு வழங்கப்படும் என்றவாறு.

செந்தொடையும், இரட்டைத்தொடையும், அந்தாதித் தொடையும் ஆமாறு போக்கிக் கூறுப.

66

'எனவும், வந்த வகையான் வழங்குமன் பெயரே”

என்றதனால், 'தொடையெல்லாம் ஆராய்ந்து விகற்பித்துக் 2காணிய புகின், பல்கும் ; சொல்லி 3உலப்பிக்கலாகா, அவற்றை வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்கிப் 4போக்கின் அல்லது,’ என்பது சொல்லப்பட்டதாயிற்று.

5

அவைதாம் பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண் ணூற்றொன்பது என்பாரும், “வரம்பில் என்பாரும் என இரு திறத்தர் ஆசிரியர். என்னை?

1. குற்றமற்ற. 2. காணப்புகுந்தால். 3. முடிப்பிக்க முடியா. 4. முடிப்பின். போக்கின் அல்லது முடிப்பிக்கலாகா என இயைக்க. 5. “மெய்பெறு மரபின்” என்னும் செய்யுளியல் நூற்பாவிற்கு இளம்பூரணர் உரைத்த உரைகாண்க. 'வடிவுபெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்று ஒன்பது என்றவாறு என உரைகூறி அத்தொடை விகற்பங்களை எண்ணிக் காட்டியுள்ளார். (தொல். செய். 97). 6. பல்காயனார் முதலிய ஆசிரியர்கள். “மோனை எதுகை முரணே எனவரும் நூற்பாவைக் காண்க.