உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

5.

10.

15.

தினமீன் வேட்டுவர் ஞாழலொடு *மலையும் மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன தோளே; சேயிறா முகந்த நுரைபிதிர்ப் படுதிரைப் பராஅரைப் புன்னை வாங்குசினைத் தொடுத்த கானலம் பெருந்துறை நோக்கி இவளே கொய்சுவற் புரவிக் கைவண் கோமான் நற்றேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன அம்மா மேனி தொன்னலம் சிதையத் துஞ்சாக் கண்ணள் அலமரும் ; நீயே கடவுள் மராத்த முண்மிடை குடம்பைச் சேவலொடு வதியும் சிறுகரும் பேடை இன்னா துயவும் கங்குலம்

நும்மூர் உள்ளுவை ; நோகோ யானே'

அகநானூறு 270

எனவும் செந்தொடை வந்தவாறு. பிறவும் வந்தவழிக் கண்டு

கொள்க.

(கஅ)

இரட்டைத் தொடை

ருக. இரட்டை

அடிமுழு தொருசீர் இயற்றே.

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், இரட்டைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) ஓர் அடி முடியும் அளவும் ஒரு சீரே நடப்பது ரட்டைத் தொடை என்றவாறு.

என்னை?

"முழுவதும் ஒன்றின் இரட்டை யாகும்"

என்றார் பல்காயனார்.

“சீர்முழு தொன்றின் இரட்டை யாகும்”

என்றார் நற்றத்தனார்.

"ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை”

என்றார் அவிநயனார்.

66

ஒருசீர் அடிமுழுதும் வருவ திரட்டை” என்றார் மயேச்சுரர்.

66

அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை” என்றார் பரிமாணனார்.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(பா. வே) *மிலையும்.