உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

சந்தனக் குழம்பு முலைமிசைத் தடவிய

வியனறுங் கோதைக்கு மெல்லிதால் நுசுப்பே

இது மண்டல 'அசையந்தாதி

5.

15.

66

(நேரிசை ஆசிரியப்பா)

‘முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி

இப்பி ஈன்ற இலங்குகதிர் நித்திலம் நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர் எக்கர் இட்ட எறிமீன் உணங்கல் உணங்கல் கவரும் *ஒய்தாள் அன்னம் அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர் மகளிர் கொய்த மயங்கு கொடி அடம்பி அடம்பி அயலது நெடும்பூந் தாழை தாழை அயலது வீழ்குலைக் கண்டல் கண்டல் அயலது முண்டகக் கானல் கானல் அயலது காமரு நெடுங்கழி நெடுங்கழி அயலது நெருங்குகுடிப் பாக்கம் பாக்கத் தோளே பூக்கமழ் ஓதி பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின் இடவ குடவ தடவ ஞாழலும்

இணர துணர்புணர் புன்னையும் கண்டலும் கெழீஇய கானலஞ் சேர்ப்பனை இன்றித் தீரா *நோயினள் நடுங்கி

வாராள் அம்ம வருதுயர் பெரிதே!”

இத்தொடக்கத்தன செந்நடைச் சீரந்தாதி.

(நேரிசை ஆசிரியப்பா)

“உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை

1.

219

முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்

ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை

(அசை)

(சீர்)

(அடி)

அறிவுசேர் உள்ளமோ டருந்தவும் புரிந்து

எழுத்தந்தாதிக்குக் காட்டப்பெற்ற எடுத்துக் காட்டில் 'வே' என ஈறும் வேங்' என முதலும்

அமைந்துள்ளமையால் நேரசையே ஆயினும் எழுத்தளவே அந்தாதி ஆயிற்று.

அசையந்தாதிக்குக் காட்டப் பெற்ற எடுத்துக்காட்டில் ஈற்றசையும் முதலசையும் ஒன்றாயிருத்தல் அறிந்து வேற்றுமை காண்க.

(பா. வே) *செந்தாள். *நோயென.