உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

துன்னிய மாந்தரஃ தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே”

(எழுத்து) திருப்பாமாலை. யா. கா. 18. மேற்.

து' மண்டல மயக்கந்தாதி.

தொல். செய். 98. இளம். மேற்.

(நேரிசை ஆசிரியப்பா)

“பொன்னலர் துதைந்த பொரிதாள் வேங்கை வேங்கை ஓங்கிய வியன்பெருங் குன்றம் குன்றத் தயலது கொடிச்சியர் கொய்புனம் புனத்தயற் சென்ற சிலம்பன்

சிலம்படி மாதர்க்கு நிறைதோற் றனனே’

99

(சீர்)

(அசை)

இது சீரந்தாதியும் அசையந்தாதியும் வந்த செந்நடை மயக்கந்தாதி.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“வேத முதல்வ ! ஏதமில் அகணித ! தத்துவர் தலைவ ! முத்தி முதல்வ !

வழுவா ஞானக் குழுவுடன் வந்தது துனனாப் பாவ மன்னரை அவித்த தரும நேமிப் பரமனென வியந்து துன்னின ராகி மின்னென மிளிர்ந்த தகைமுடி சாய்த்துச் சத்துவர் வணங்குவ வகை முடி *வில்லினை வாடுக எனவே”

திருப்பாமாலை.

இஃது 2அசையந்தாதியும் எழுத்தந்தாதியும் மயங்கி வந்த மண்டல மயக்கந்தாதி. இதனை எழுத்தந்தாதி என்று வேண்டு வாரும் உளர்.

(கலி விருத்தம்)

66

"ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை

போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை

போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கிய 3சேதியஞ் செல்வ! நின் றிருவடி பரவுதும்"

இஃது அடியந்தாதி.

46

சூளாமணி 214

இரங்கு குயில்முழவா' என்னும் பாட்டினுள் இடையிட்ட

அடியந்தாதி வந்தது.

1. இதில் எழுத்து அசை சீர் அடி என்னும் நான்கும் மயங்கி 'உலகு' என்னும் முதற்சீர் ‘உலகே’ என்னும் ஈற்றுச்சீரோடு மண்டலித்து முடிந்தமை காண்க. 2. பாடலின் ஈறும் முதலும் அசையந்தாதி. எஞ்சியவை எழுத்தந்தாதி. 3. சைனத்திருக்கோயில். 4.இப்பாடலை 218 ஆம் பக்கத்துக் காண்க. (பா. வே) *வல்வினை.