உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஓவிலந் தாதி உலகுட னாம் ; ஒக்கு மேயிரட்டை;

பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் *பணிமொழியே!”

இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

யா. கா. 18. (20)

ஒரு செய்யுட்கண் தொடை தளைகளிற் பல விரவி வரின் அவற்றை வழங்குமாறு

ருகூ. தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும்

முதல்வந் ததனால் மொழிந்திசிற் பெயரே.

என்பது என் நுதலிற்றோ?' எனின், ஒரு செய்யுட்கண் பல தொடையும் பலதளையும் வந்தால், அவற்றை வழங்கும் முறை உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) ஒரு செய்யுளகத்துத் தொடை பல தொடுத்து வந்தாலும், தளை பல விரவி வந்தாலும், அவற்றை முதல் வந்த தொடையாலும் முதல் வந்த தளையாலும் பெயர் கொடுத்து வழங்குக என்றவாறு.

“மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரால் இயங்கினும் தளைவகை இன்னணம் ஆகும்"

என்றார் அவிநயனார்.

“பல்வகைத் தொடையொரு பாவினிற் றொடுப்பின், சொல்லிய முதற்றொடை சொல்லினர் கொளலே” என்றார் சிறுகாக்கைபாடினியார்.

“தொடையடி யுட்பல வந்தால் எழுவாய்

உடையத னாற்பெயர் ஒட்டப் படுமே"

என்றார் காக்கைபாடினியார்.

“விகற்பம் கொள்ளா தோசைய தமைதியும் முதற்கண் அடிவயின் முடிவ தாகும்

என்றார் பல்காயனார்.

66

முதற்சீர்த் தோற்றம் அல்ல தேனை விகற்பம் கொள்ளார் அடியிறந்து வரினே’

என்றார் நற்றத்தனார்.

அவை வருமாறு:

  • பனிமொழியே.