உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(நேரிசை ஆசிரியப்பா)

'தாமரை புரையும் காமர் சேவடிப் பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப

ஏம வைகல் எய்தின்றால் உலகே

223

(பொழிப்பெதுகை)

(ஒரூஉ எதுகை)

(ஒரூஉ மோனை)

(பொழிப்பு மோனை)

குறுந்தொகை. கடவுள் வாழ்த்து.

இதனுள் பொழிப்பெதுகையும், ஒரூஉ எதுகையும், ஒரூஉ மோனையும், பிறிதும் வந்தனவாயினும், முதல் வந்ததனானே பெயர் கொடுத்துப் பொழிப் பெதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்.

(அடி எதுகை)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின் (கூழை மோனை) சாரல் நாட ! செவ்வியை ஆகுமதி;

யாரஃ தறிந்திசி னோரே? சாரற்

(ஒரூஉ எதுகை)

(இணை முரண்) சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்

(கடை இணை எதுகை)

உயிர் தவச் சிறிது ; காமமோ பெரிதோ!"(பின் முரண்)

குறுந்தொகை 18.

இதனுள் அடி எதுகையும், கூழை மோனையும், ஒரூஉ எதுகையும், இணை முரணும், கடையிணை எதுகையும், பின் முரணும் வந்தன வாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்.

(நேரிசை ஆசிரியப்பா)

அடி

66

கடிமலர் புரையும் காமர் சேவடி

(பொழிப்பு மோனை

(பொ. மோ)

(எதுகை) கொடிபுரை நுசுப்பிற் பணைத்தேந் திளமுலை

அடி வளையொடு கெழீஇய வாங்கமை நெடுந்தோள் (மோனை) வளர்மதி புரையும் திருநுதல் அரிவை

அடி சேயரி நாட்டமும் அன்றிக்

(முரண்) கருநெடுங் கூழையும் உடையவால் அணங்கே'

இதனுள் எதுகையும், மோனையும், முரணும் முறையே வந்தன வாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்.