உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

66.

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை ஆசிரியப்பா)

பரவை மாக்கடல் தொகுதிரை வரவும் பண்டைச் செய்தி இன்றிவண் வரவும்

(அடி. மோ.) பகற்பின் முட்டா திரவினது வரவும், பசியும் ஆர்கையும் வரவும்

பரியினும் போகா துவப்பினும் வருமே

(பொ. முரண்)

99

யா. வி. 49. மேற்.

இதனுள் மோனையும், 'இயைபும், முரணும் வந்தனவாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து அடிமோனைச் செய்யுள் என்று வழங்கப்படும் பிற,' எனின், அற்றன்று; முறையானே வேறு வேறு தொடைகள் பெற்று வாராது. பலவாய் வந்து, இறுவாய் ஒத்தமையின், மயக்கு இயைபு எனக் கொள்க.

  • 66

(நேரிசை ஆசிரியப்பா)

'ஓங்குவரை அமன்ற வேங்கை நறு மலரும் ஊர்கெழு நெய்தல் வார்கெழு மலரும்

பழனத் தாமரை எழினிற மலரும்

இல்லயற் புறவின் முல்லைவெண் மலரும்

உராஅம் கடற்றிரை விராஅ மலரும்

வேறுபட மிலைச்சிய நாறிருங் குஞ்சி

ஏந்தல் பொய்க்குவன் எனவும்

பூந்தண் *உண்கண் புலம்பா னாவே'

- யா. வி. 40. மேற்.

இதுவும்2மயக்கு இயைபுத்தொடை என்று வழங்கப்படும். மயக்கு அளபெடைத் தொடையும் வந்தவழிக் கண்டுகொள்க.

(கட்டளைக் கலித்துறை)

“காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே’

99

யா. வி. 94. மேற். தனுள் எதுகையும் அதற்கேற்ற மோனையும் வந்தனவாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, ஆசிடை செய்யுள் என்று வழங்கப்படும்.

எதுகைச்

1. அடியிறுதியில் வரும் 'வரவும்' என்பன. 2. இப் பாடலில் இயைபுத் தொடையும், பொழிப்பு எதுகைத் தொடையும், பொழிப்பு அளபெடைத் தொடையும், பொழிப்பு மோனைத் தொடையும் வந்தனவாகலின் மயக்கு இயைபுத் தொடையாயிற்று.

(பா. வே) *ஓங்குமலை. *ஒண்கண்.