உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

இனித் தளைக்குச் சொல்லுமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின் விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கேடுவன் உண்டுசிலம் ’பேறி ஓங்கிய இருங்கழைப் படிதம் பயிற்றும் என்ப

மடியாக் கொலைவில் என்னையார்4 மலையே'

225

யா. கா. 38. மேற்.

இதனுள் வெண்டளையும், கலித்தளையும், வஞ்சித்தளையும் வந்தன எனினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, வெண்டளையால் வந்த ஆசிரியப்பா என்று வழங்கப்படும். (எண்சீர் ஆசிரிய விருத்தம்)

66

“கடுநாக மதனடக்கி நெடுநீர்ப் பொய்கைக் கடமலர்வேய்ந் துலகளவும் பரந்த கந்த நெடுமாலை நறுமுடிமேல் வைத்தி யேனும் *நின்னையெற் பொன்னயக்க நின்றார் எல்லாம் கொடுமாலை வினையரக்கர் குறும்பு சாயக் குளிரிளம்பூம் பிண்டிக்கீழ் அமர்ந்த கோமான் தடுமாற்றம் தலைப்பிரிக்கும் சரணம் அல்லால்

தலைக்கணியாள் என்றுரைத்தல் தகவோ வாழி !”

தனுட் கலித்தளையும், ஆசிரியத்தளையும், வெண்டளையும் வந்தவாயினும், முதல் வந்த தளையாற் பெயர் கொடுத்து, கலித்தளையால் வந்த ஆசிரிய விருத்தம் என்று வழங்கப்படும். பிறவும் இவ்வாறே பெயர் கொடுத்து வழங்குக.

“தொடையும் தளையும் பலவிர விவரின்

முதல்வந்த ததனால் மொழிந்திசிற் பெயரே”

என்றாலும் கருதிய பொருள் பயக்கும். 'தொடைபல தொடுப் பினும் தளைபல விரவினும்' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

விகற்பமும் இனமும் வாராமைத் தொடுத்த மோனை, எதுகை முரண், இயைபு, அளபெடைகளைச் செம்மோனை, செவ்வெதுகை, செம்முரண், செவ்வியைபு, செவ்வளபெடை என வழங்கப்படும் என்பதூஉம்; கடையாகு மோனைக்கும்

1, 2 கலித்தளைகள். 3. வஞ்சித்தளை. 4. கலித்தளை.

(பா. வே) *நின்னையே போனயக்க.