உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கடையாகு எதுகைக்கும் ஏற்று வந்தால், எதுகைத் தொடை யானே பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம் ; மோனையும் எதுகையுமாய் வந்து முரணினால், மோனை முரண் என்றும் எதுகை முரண் என்றும் பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம்; இணை மோனை முதலாகிய தொடை விகற்பங்களும் ஓரடியுட் பல விரவி வந்தால், வரன்முறையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம்; ‘வரனடை இல்லாதவழி யாதானும் ஒன்றாற் பெயர் கொடுத்து வழங்கப்படும்' என்பாரும், 'விகற்ப மயக்கம்’ என்பாரும் என இரு திறத்தார் ஆசிரியர் என்பதூஉம் ; ஓரடியுள் முதற் குறில் விட்டிசைத்து, மற்றை அடியுள் முதற்கட் குற்றெழுத்து வல்லொற்றடுத்து வந்தால், அதனை விட்டிசை வல்லொற்றெதுகை என்று வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பதூஉம்; செய்யுள் ஈற்றடி இறுதி எழுத்தொன்றும் இரண்டு மிகினும் இழுக்காகாது என்பதூஉம் ; இரட்டைத்தொடை இறுதிக்கண் ஓரெழுத்துக் குறையினும் இழுக்காகாது என்பதூஉம்; செய்யுளினம் தொடுக்கின் ஈற்றெழுத்தானும் சொல்லானும் இடையிட்டே தொகுப்பினும் இழுக்காகாது என்பதூஉம் வேற்றினமும் வழியெதுகை முதலியவும் வந்து முன் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமைத் தொடுத்து வருவனவற்றைச் செந்தொடை மருள் என்றும் மருட்செந்தொடை என்றும் வேண்டுவர் ஒருசார் ஆசிரியர் என்பதூஉம் ; மகார வகாரங்கள் அருகி எதுகையாய் வரினும் இழுக்காகாது என்பதூஉம் அறிவித்தற்கு வேண்டப்பட்டது; “விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்”

ஆகலின்.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“சிலம்படி மாதர் நன்னலம் குறித்துச்

சிலம்பதர் நள்ளென் கங்குற்

சிலம்பநீ வருதல் தகுவதோ அன்றே”

இஃது இன எழுத்தும் விகற்பமும் வரத் தொடுத்ததின்மை யால், செம்மோனை.

(குறள் வெண்பா)

“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன் றுள்ளக் கெடும்

திருக்குறள் 109.

எனவும்,