உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்”

என்னும் இரட்டைத் தொடையின் ஈற்றுச்சீர் ஈற்றெழுத்து ஒன்று குறைந்து வந்தவாறு கண்டுகொள்க.

இறுதி குறைந்து வரும் ஒரு பொருள் இரட்டையைக் ‘குறையீற்று ஒரு பொருள் இரட்டை’ என்றும், குறையாததனை ‘நிறையீற்று ஒரு பொருள் இரட்டை என்றும்; இறுதி குறைந்த பல பொருள் இரட்டையைக் ‘குறையீற்றுப்பல பொருள் இரட்டை” என்றும், குறையாததனை ‘நிறையீற்றுப் பலபொருள் ரட்டை' என்றும் என்றும் பெயரிட்டு வழங்குவாரும் உளர் எனக் கொள்க. குறையீற்றுப் பல பொருள் இரட்டையும், நிறையீற்றுப் பல பொருட் இரட்டையும் வந்த வழிக் கண்டுகொள்க.

இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பம், 'உதயணன் கதையும் கலியாண கதையும், பன்மணி மாலையும் மும்மணிக் கோவையும் என்றிவற்றுட் கண்டு கொள்க.

(குறள் வெண்பா)

66

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்

- திருக்குறள். 64.

என்பது, *இனவெழுத்துப் பெற்று, முன் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமைத் தொடுத்தமையின், செந்தொடை மருள் எனக் கொள்க.

(நேரிசை ஆசிரியப்பா)

“தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் மானமின் றெவனோ சொல்லாய் வாழி தோழி! வரைய முள்ளில் பொதுளிய பல்குரல் நெடுவெதிர் பொங்குரல் இளமழை துவைப்ப

மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே’

99

(பொ. இ)

(இ.பு. எதுகை.)

யா. வி. 95. மேற்.

தொல். செய். 219. மேற்.இளம்.

இது பொழிப்பு இயைபும், இடைப்புணர் எதுகையும் வந்து இனமின்றித் தொடுத்தமையாற் செந்தொடை மருள் என்றும் மருட் செந்தொடை என்றும் வழங்கப்படும். இதனைச் செந்தொடையே என்று வழங்கினார் செய்யுளியல் உடையார் எனக் கொள்க.

1. யா. வி. 52 உரையை நோக்குக.

(பா. வே) *இனவெழுத்து முதலாயின பெற்று.