உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

231

66

தாமரை புரையும் காமர் சேவடி

குறுந்தொகை - கடவுள் வாழ்த்து.

என்னும் பாட்டினுள் 'ஈற்றடி இரண்டும் மகார வகாரங்கள் எதுகையாய் வந்தன.

(கலி விருத்தம்)

66

"அமரீர் ! அசுரீர் ! அழனா கரையீர்!

எமரீர் ! பிறரீர் ! எறிவேல் ஒருவன் நமரீர் ! பகவீர் ! தகவோ தகவென்

றவரூர் திரைபாய்ந் துரையா தொழிதல்?”

துவும் அது. இதனை மூன்றாம் எழுத்தொன்று எதுகை என்பாரும் உளர்.

66

இனவெழுத்து ஆமாறு சொல்லுதும்.

'அகரமும், ஆகாரமும், ஐகாரமும், ஒளகாரமும் தம்முள் இனமாம். *இகரமும், ஈகாரமும், எகரமும், ஏகாரமும், தம்முள் இனமாம்

உகரமும், ஊகாரமும், ஒகரமும், ஓகாரமும் தம்முள் இனமாம்.

இவ்வாறே இவ்வுயிர்மெய்க்கும் ஒட்டிக்கொள்க. ஒற்றுக்களுள். சகர தகரங்களும் தம்முள் இனமாம். ஞகர நகரங்களும் தம்முள் இனமாம்.

வகர மகரங்களும் தம்முள் இனமாம்.

இவற்றை ‘அனு' என்று வழங்குவாரும் உளர். இவற்றுக்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.

66

(நேரிசை வெண்பா)

‘அகரமோ டாகாரம் ஐகாரம் ஔகான் இகரமோ டீகாரம் எஏ - உகரமோ

டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்

ஆகாத அல்ல அனு

இதனை விரித்து உரைத்துக் கொள்க.

66

'அஆ ஐஒள என்றிவை எனாஅ

இஈ எஏ என்றிவை எனாஅ

உஊ ஓஓ என்றிவை எனாஅத் தசமவ ஞநவெனும் என்றிவை எனாஅ

முந்நா லுயிரும் மூவிரு மெய்யும்

தம்முள் மயங்கினும் தவறின் றென்ப”

-

யா. கா. 41. மேற்.

என்றிவை இனம் ஆமாறு எடுத்து ஓதினார் நல்லாறனார் எனக் கொள்க.

1. "சேவலங் கொடியோன் காப்ப

ஏமவைகல் எய்தின்றால் உலகே”

(பா. வே) இகர ஈகார எகர ஏகாரங்களும் 'யா' என்பதும் தம்முள் இனமாம்.