உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(மருட்பா)

1“நிழன்மணி நின்றிமைக்கும் நீளார மார்பின் அழன்மணி நாகத் தணையான் - சுழன்மணிசூழ் பொன்னகரம் போகிய பூம்பனிச்சை நன்னீர் இளந்தளிர் 'மாவனுக்கும் மேனி - விளங்கும் “நளிமலர் *நறுநுதல் அரிவை

அளிமதி யிஃதோ அகலுமென் உயிரே

எனவும் கொள்க.

கைக்கிளையும் வெண்பா முதலாய் ஆசிரியம் ஈறாய் வரும் வழி, ஆசிரிய அடி இரண்டேயாய், அவற்றுள் ஈற்றடி நாற்சீராய், ஈற்றயலடி முச்சீராய் வருவது எனக் கொள்க. என்னை?

"இருதலைக் காமம் இன்றிக் கைக்கிளை

5

ஒருதலைக் காம மாகக் கூறிய

இலக்கண மரபின் இயல்புற நாட்டி

அதர்ப்பட மொழிந்தனர் புலவர் அதுவே °பெறுதி வெண்பா உரித்தாய் மற்றதன்

இறுதி எழுசீர் ஆசிரி யம்மே

“வெண்பா ஆசிரி யத்தாய் மற்றதன்

இறுதி எழுசீர் ஆசிரி யம்மே

“கைக்கிளை மருட்பா வாகி வருகால் ஆசிரியம் வருவ தாயின் மேவா முச்சீர் 'எருத்திற் றாகி முடிவடி

எச்சீ ரானும் ஏகாரம் இறுமே”

என்பது ஆகலின்.

கடியநன்னீயார் செய்த கைக்கிளைச் சூத்திரம்

“புறநிலை வாயுறை செவியறி வவையடக்கு

எனவிவை வஞ்சி கலியவற் றியலா”

அவற்றுள்,

668

“8இடையிரு செய்யுளும் கைக்கிளைப் பாட்டும்

9.

கடையெழு சீரிரண் டகவியும் வருமே’

என்றார் *நல்லாறனார்.

1. ஒளிமிக்க மணி. 2. அழகிய கூந்தல். பனிச்சையாவது ஐம்பால் கூந்தலுள் ஒன்று. 3. மாந்தளிர் அழகைத் தொலைக்கும் உடல். 4.தண்ணியமலர். 5. முறையாக 6. முதற்கண் பெறுவது. 7. ஈற்றயலடி. 8. வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉம். 9. அகவல் ஒலியுடன்.

(பா. வே) *நன்னுதல். *கடிய நன்னியார். *நல்லாதனார்.