உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

அற்றம் அறிந்த அறிவினாய் ! - மற்றும் இவையிவை* 'நீயா தொழுகின் *நிலையாப் பொருகடல் ஆடை நிலமகள்

ஒருகுடை நீழல் துஞ்சுவள் மன்னே'

239

யா. கா. 35. மேற்.

து, 'வியப்பின்றி உயர்ந்தோர்கண் அவிந்து ஒழுகுதல் கடன்,' என்று அரசற்கு உரைத்தமையான், செவியறிவுறூஉ மருட்பா எனப்படும். என்னை?

"செவியுறை தானே,

பொங்குதல் இன்றிப் 'புரையோர் நாப்பண் 3அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே"

என்றாராகலின்.

தொல். செய். 113.

இ இவை இவ்வாறே அன்றி, வெண்பாவேயாயும், ஆசிரியமே யாயும் வரப்பெறும் ; கலியும் வஞ்சியுமாய் வரப் பெறா.

என்னை?

66

“வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்

66

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

'வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென இவையும் அன்ன

என்றாராகலின்.

தொல். செய். 109.

- தொல். செய். 110.

கைக்கிளையும் வெண்பா முதலாக ஆசிரிய இயலான்

இறும் என்னை?

66

'கைக்கிளை தானே வெண்பா வாகி

ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே'

என்றாராகலின்.

- தொல். செய். 118.

வரலாறு:

(மருட்பா)

“திருநுதல் வேரரும்பும்; தேங்கோதை வாடும்; இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த *போகிதழ் உண்கணும் இமைக்கும் ;

ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே

எனவும்,

புறப்பொருள் வெண்பாமாலை 287.

1. விலக்காது. 2. சான்றோர் இடையே. 3. அடங்கி ஒழுகுதல். (பா. வே) *வீயா. *நிலையாம். *சேயிதழ்.