உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'விலங்கிவருங் கூற்றை விலக்கலும் ஆகா

தனைத்தாதல் நீயிரும் காண்டிர்; - நினைத்தகக்

2

கூறிய வெம்மொழி பிழையாது

தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே”

யா. கா. 35. மேற்.

6

து மெய்ப்பொருள் சொன்னமையான், வாயுறை வாழ்த்து மருட்பா. என்னை?

66

'வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்,

வேம்பும் 'கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென் 4றோம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே”

- தொல். செய். 111.

(மருட்பா)

என்றாகலின்.

1.

66

‘பல்யானை மன்னர் முருங்க அமருழந்து கொல்யானை தேரோடு 'கோட்டந்து – நல்ல தலையாலங் கானம் பொலியத் தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் °மருக.! - அடுதிறல் ஆளி நிமிர்தோள் பெருவழுதி ! - எஞ்ஞான்றும் ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி; உடைய உழவரை 7நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல்; மழவர் இழைக்கும் வரைகாண் நிதியீட்டம் காட்டும் அமைச்சதை ’ஆற்றத் தெளியல் ; அடைத்த அரும்பொருள் °ஆறன்றி வௌவல்; ஈகைப் பெரும்பொருள் ஆசையாற் சென்று பெருங்" குழிசி, மன்ற மறுக அகழாதி; என்றும் மறப்புற மாக மதுரையார் ஓம்பும் அறப்புறம் 12 ஆசைப் படேற்க ; - அறத்தால் அவையார் 13 கொடுநாத் திருத்தி நவையாக

8.

14

-

நட்டார் குழிசி சிதையாதி ; ஒட்டார்

செவிபுதைக்கும் தீய கடுஞ்சொற் *கலிபடைத்தாய்! கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செகுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதி;

வேறுபட்டுவரும். 2. இறுதி இரண்டும் ஆசிரிய அடிகள். 3. நோய்க்கு மருந்தாம் நஞ்சு. 4. பாதுகாக்கும் சொல். 5. கொண்டு. 6. வழித்தோன்றால். 7. மனம் வருந்த. 8. வீரர். 9. முற்ற 10. முறையின்றிக் கவராதே. 11. உண்கலம். 12. ஆசைப்படாதே. 13. ஒருபால்சாய்ந்த நா. 14. பகைவர்.

(பா. வே) *கவியுடைத்தாய்.