உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

"மலிதேரான் 'கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் ;- மலிதேரான் கச்சி பேடுவ கடல்படா ; கச்சி

கடல்படுவ எல்லாம் படும்

எனவும்,

6

66

273

- தண்டியலங்காரம் 49. மேற். -யா. கா. 24. மேற்.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்; - திங்கள் மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார், தெருமந்து தேய்வர் ஒருமா சுறின்

99

நாலடியார் 151.

எனவும் இவை தனிச்சொற் பெற்றுப் பல விகற்பத்தான் வந்தன.

என்னை?

“ஒருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும், இருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும்,

தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியும், தனிச்சொல் இன்றிப் பலவிகிற் பாகியும், அடியடி தோறும் ஒரூஉத்தொடை அடைநவும்

எனவைந் தாகும் இன்னிசை தானே" என்றாராகலின்.

- யா. கா. 24. மேற்.

தனிச்சொற்பெற்றுப் பலவிகற்பத்தால் வருவன விதப்பினால்

உடன்பட்டார் காக்கைபாடினியார்.

பஃறொடை வெண்பா

62. பாதம் பலவரின் பஃறொடை வெண்பா.

(அ)

இச்சூத்திரம், பஃறொடை வெண்பா ஆமாறு உணர்த்துதல்

நுதலிற்று.

-ள்) நான்கடியின் மிக்க பல அடியால் வருவது பஃறொடை வெண்பா எனப்படும் என்றவாறு.

நேரிசை வெண்பாவிற்கும் இன்னிசை வெண்பாவிற்கும் நான்கடி உரிமை சொன்னாராகலின், 'நான்கடியின் மிக்க பல அடி' என்பது ஆற்றலாற் பெறப்பட்டது.

‘பல தொடையான் வருவது பஃறொடை வெண்பா,' எனக் காரணக் குறியோடு வாசகம் தழுவச் சூத்திரம் செய்யாது, வேறொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? 1. காஞ்சி. 2. கிடைப்பவை