உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(பல விகற்பப் பஃறொடை வெண்பா) “மலைமேல் மரங்கொணர்ந்து மாண்புடைத்தாச் செய்த நிலையொத்த வீதி நெடுமாடக் கூடல்

'விலைத்தயிர் கொள்ளீரோ?" என்பாள் முலையிரண்டும் சோழன் உறந்தைக் குரும்பையோ ! தொண்டைமான் வேழஞ்சேர் வேங்கடத்துக் கோங்கரும்போ ! ஈழத்துத் தச்சன் கடைந்த இணைச்செப்போ! அச்சுற்றுள்

அன்னமோ! ஆய்மயிலோ ! 'ஆரஞர்நோய் செய்தாளை

இன்னந் தெரிகிற் றிலம்”

275

இஃது எட்டடியால் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பா.

(பல விகற்பப் பஃறொடை வெண்பா)

“சிற்றியாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய்! வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும் ஒப்ப உடைத்தாய் 'ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேரும் தையலாய் ! நின்னூர்ப்பேர் ஒத்தாய வண்ணம் உரைநீ எனக்கூறக் ‘கட்டலர் தாமரையுள் ஏழும், கடுமான்றேர்க் *4கத்திருவ ருள்ளைந்தும், காயா மரமொன்றும், பெற்றவிழ்தேர்ந் துண்ணாத பேயின் *இருந்தலையும், வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால்

ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயர்', என்றாள் வானவன்கை விற்பொறித்த வேற்புருவத் தாள்"

- தொல். செய் 114. இளம்.

இது பன்னீரடியாற் 5பெருவல்லத்தைச் சொன்ன வெண்பா.

ன்னும் பல அடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராணசாகரமும் செய்யுள்களிற் கண்டு கொள்க.

1.

முதலாகவுடைய

நீங்குதற்கு அரிய துன்பம். 2. இடம் விரிந்த; கால்வாயால் சிறந்த. 3. ஒலிநீங்காத. 4. வீரர். 5. பெருவல்லத்திற்குத் தீக்காலி வல்லம் என்பதொரு பெயர். (பெரிய. திருக். 30) அப்பெயர் சுட்டும் பாடல் இது ஊர்ப் பெயரின் ஏழாம் எழுத்து தாமரையுள் உளது. (கமலம்) ஐந்தாம் எழுத்து 'கத்திருவர்' என்பதனுள் உளது. காயா மரமொன்றுளது; அஃதாவது கருங்காலி; அவிழ் தேர்ந்துண்ணாத பேயின் தலையுளது. அஃதாவது தீ. வித்தாத நெல்லின் இறுதி உளது. அது வெதிரம் என்னும் மூங்கில்நெல். இவற்றைக் கூட்டி ஒத்து இயைக்க 'க்' 'ல்' என்பவை செறிந்து, தீக்காலி வல்லமாதல் அறிக.

(பா. வே) *கத்திரிவ ரைவரும் கத்திரிய ரைவரும், கத்திருவ ரைவரும் என்பன பிறபதிப்புப் பாடங்கள். யா. வி; தொல். செய். 114. இளம். *மே.கோ. நெடுமுதல் தொல். 161.