உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“தொடையடி இத்துணை என்னும் வழக்கம் உடையதை இன்றி உறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமம் கொளலே'

என்றார் காக்கைபாடினியார்.

“தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா என்றார் சிறுகாக்கைபாடினியார்.

“தொடைமிகத் தொடுப்பது பஃறொடை வெண்பா'

என்றார் அவிநயனார்.

66

ஏழடி இறுதி ஈரடி முதலா

ஏறிய வெள்ளைக் கியைந்தன அடியே; மிக்கடி வருவது செய்யுட் குறித்தே”

எனவும்,

66

ஆறடி முக்காற் பாட்டெனப் படுமே;

ஏறிய அடியும் செய்யுளுள் வரையார்'

(சங்கயாப்பு)

யா. வி. 32. மேற்.

எனவும் ஒருசார் ஆசிரியர், சிறப்புடைமை நோக்கி, ‘ஏழடி' என்று எடுத்தோதினார். அல்லவும் உடம்பட்டார் *தொடர்நிலைப் பஃறொடை வெண்பாப் பல அடியாலும் வரும் என்று இவ்வாறு சொன்னார் எனக் கொள்க.

குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என்னும் ஐந்து வெண்பாவும் இனக்குறள் வெண்பா, விகற்பக்குறள் வெண்பா நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசை வெண்பா, இரு விகற்ப நேரிசை வெண்பா, ஒரு விகற்ப இன்னிசை வெண்பா, பல விகற்ப இன்னிசை வெண்பா, ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா என்று இவ்வாறு விகற்பிக்கப் பத்தாம். அவை தன்சீர் வெண்டளையாலும் இயற்சீர் வெண்டளையாலும் கூறுபடுப்ப, இருபதாம். அவை தன்சீர்ச் சிறப்புடை வெண்டளையாலும் தன் சீர்ச் சிறப்பில் வெண்டளையாலும், இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையாலும் இயற்சீர்ச் சிறப்பில் வெண்டளையாலும் இவ்வாறு கூறுபடுப்ப, நாற்பதாம். மூன்று செப்பலோசையாலும் பத்து வெண்பா வினையும் உறழ முப்பதாம். ஓசையும் தளையும் கூட்டி உறழ நூற்றிருபதாம். மற்றும் பிறவகையாலும் விகற்பித்து நோக்கப் பலவுமாம்.

(பா. வே) *தொடைநிலை.