உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(கட்டளைக் கலித்துறை)

“ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல் இன்றி நடப்பினஃ தின்னிசை ; துன்னும் அடிபலவாய்ச் சென்று நிகழ்வ பஃறொடையாம் ; சிறை வண்டினங்கள் துன்றும் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே!” என்னும் இக்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க. (நேரிசை வெண்பா)

“பண்பாய்ந்த 'ஏழு பதினா றிழிபுயர்வா

வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின் ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும் 3பாற்படுத்தார் நூலோர் பயின்று

எனவும்,

66

குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமோ

டொற்றும் எனவொரு நான்கொழித்துக் - கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச் செயிர்தீர்ந்த செய்யுள் அடிக்கு

எனவும்,

66

“முற்றுகரந் தானும் “முதற்பாவின் ஈற்றடிப்பின் நிற்றல் சிறுபான்மை நேர்ந்தமையால் - மற்ற அடிமருங்கின் ஐயிரண்டோ டோரெழுத்து மாதல் துடிமருங்கின் மெல்லியலாய் 'சொல்லு

எனவும்,

66

ஆதியாய் ஆற்றல் உடைத்தாய் வரம்பிகவா நீதிசால் நூல்பொருந்தி நிற்றலால் - ஓதநீர் °மண்பாவு தொல்சீர் மறைவாணர் பாற்சார்த்தி வெண்பா உரைத்தார் விரித்து”

எனவும், (இதன் ஈற்றடி எழுத்துப் பதினொன்று) “வெண்பாவோர் ஐந்தும் விகற்பத்தாற் பத்தாகித் தண்பாற் றளைநான்கின் நாற்பதாய்த் - திண்பான்மைச் செப்பல் ஒரு மூன்றின் வந்துறழத் சேர்ந்தபாத் தப்பாத 'முந்நாற்ப தாம்”

எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

277

யா. கா. 24.

(Fn)

1. ஏழு இழிபும் பதினாறு உயர்வும் ; நிரல்நிறை. 2. ஐந்து முதல். 3. பகுத்து வைத்தார். 4. வெண்பாவின். 5. முற்றியலுகரத்தான் முடிந்ததாகலின் விதிப்படி பதினோரெழுத்துப் பெற்றது. 6. உலகெல்லாம் பரவிய. 7. நூற்றிருபதாம். நூற்றிருபதாதல் மேலே உரையிடைக் கூறப்பெற்றது.