உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வெண் செந்துறை

௬ங, ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய் விழுமிய பொருளது வெண்செந் துறையே.

இஃது என் நுதலிற்றோ?' எனின், வெண்பாவின் இனம் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார், அவற்றுள் ச்சூத்திரம் வெண்செந்துறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இள்) ஒழுகிய ஓசையினை உடைத்தாய்த் தம்முள் ஒத்து வந்த இரண்டு அடித்தாய், விழுமிய பொருளைப் பயந்து நிற்பது யாது? அது வெண்செந்துறை என்றும் செந்துறை வெள்ளை என்றும் வழங்கப்படும் என்றவாறு.

சீர் வரையறுத்திலாமையின், எனைத்துச் சீரானும் வரப் பெறும்.

“அந்தம் குறையா தடியிரண் டாமெனிற்

செந்துறை என்னும் சிறப்பின தாகும்

என்றார் காக்கைபாடினியார்.

66

“ஈரடி இயைந்தது குறள்வெண்பா பாவே; ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை"

என்றார் அவிநயனார்.

66

இனி அதற்குச் செய்யுள் வருமாறு : (வெண் செந்துறை)

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை

எனவும்,

"கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே'

வி.59. யா. வி. 59. மேற்.

முதுமொழிக் காஞ்சி. 1

கொன்றை வேந்தன். 1

எனவும் இவை நாற்சீர் இரண்டடியால் வந்த செந்துறை வெள்ளை.

(வெண் செந்துறை)

“நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள் கொன்று தின்னும் மாந்தர்கள் 'குடிலும் செய்து கொள்ளாதே” ஃது அறுசீர் அடியால் வந்த செந்துறை வெள்ளை. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

1. வஞ்சம்.

(50)