உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரு.

யாப்பருங்கலம்

குறட்பாவின் இனம்

உரைத்தன இரண்டும் குறட்பா இனமே.

281

இச்சூத்திரம், வெண்செந்துறையும் குறட்டாழிசையும் ன்னபாவின் இனம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) இங்ஙனம் சொல்லப்பட்ட செந்துறை வெள்ளை யும் தாழிசைக் குறளும், குறள் வெண்பாவின் இனம் என்றவாறு. L பிறரும் இவற்றிற்கு இலக்கணச் சூத்திரம் சொல்லிப் பின்னையும்,

66

கூறிய இரண்டும் குறட்பா இனமே”

என்றார் எனக் கொள்க.

செந்துறை வெள்ளையும் தாழிசைக் குறளும் ஏழுதளை யாலும் கூறுபடுப்ப, இரண்டுமாய்ப் பதினான்கு செய்யுளாம் ; சிறப்புடைத் தளையும் சிறப்பில் தளையும் என்றிவ்வாற்றாற் கூறுபடுப்ப, இருபத்தெட்டாம்; மற்றும் விகற்பிக்கப் பலவுமாம்.

வெண்பாவிற்கு இனமாய், செவ்விதாய், ஒழுகிய ஓசைத் தாய், விழுமிய பொருளை உள்புக்குத் துறைபோய நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலின், 'வெண்செந்துறை' என்பதூஉம், செந்துறை வெள்ளை' என்பதூஉம் காரணக்குறி.

இரண்டடியாம் நேரடித்தாய்த் தாழ்ந்திசைத்தலானும், ஒழுகலோசையினும் செப்பலோசையினும் வழுவித் தாழ்ந்த ஓசைத்தாகலானும், விழுப்ப மின்றித் திண்ணிதாகிய பொருளைச் சொல்லுதலானும் ‘குறட்டாழிசை' என்பதூஉம், 'தாழிசைக் குறள்' என்பதூஉம் காரணக்குறி.

சுசு.

வெண்டாழிசை

அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய் விடினது வெள்ளொத் தாழிசை யாகும்.

(கஉ)

இச்சூத்திரம், வெண்டாழிசை ஆமாறு உணர்த்துதல்

நுதலிற்று.

(இ.ள்) அடி மூன்றாய், ஈற்றடி முச்சீராய், இறுவன யாவை? அவை ‘வெள்ளொத்தாழிசை' என்றும் 'வெண்டாழிசை' என்றும் வழங்கப்படும் என்றவாறு.

“அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய் வெள்ளொத் தாழிசை ஆகும்”

என்றாலும், கருதிய பொருளைப் பயக்கும், ‘விடினது' என்று மிகுத்துச் சொல்லவேண்டியது என்னை?