உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

289

என்றார் நீர் மலிந்த வார் சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர். (மயேச்சுரர்)

உடைமை

மூன்றடியால் வரும் வெளி விருத்தமும், மூன்றடியால் வரும் வெண்டுறையும், வெள்ளொத்தாழிசையும் சிந்தியல் வண்பாவின் இனம் என்றும் ; தனிச்சொல் யால், நான்கடி வெளி விருத்தம் நேரிசை வெண்பாவின் இனம் என்றும், நான்கடி வெண்டுறை இன்னிசை வெண்பா வின் இனம் என்றும் ; ஐந்தடி முதலா ஏறிய அடியுடைய வெண்டுறைகள் பஃறொடை வெண்பாவின் இனம் என்றும் ஒருபுடை ஒப்புமை நோக்கி, அப்பாற்சார்த்தி வழங்கப் படும்.

வெண்பாவிற்கு இனமாகிய 'தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றும், 'வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை, ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை, அடிமறி மண்டில வெளிவிருத்தம், நிலை வெளி விருத்தம்' என்று கூறுபடுப்ப, ஆறாம் ; அவற்றுள் வெள்ளொத்தாழிசை, வெண்டளை நான்கினாலும் கூறுபடுப்ப, நான்கே ஆவது, வேற்றுத்தளை விரவாதாகலின்.

வெண்டாழிசை முதலாகிய ஐந்தும், சிறப்புடைய ஏழு தளையாலும் சிறப்பில் ஏழு தளையாலும் கூறுபடுப்ப, எழுபதாம்; வெள்ளொத்தாழிசை யோடும் கூட்டிச் சொல்ல, எழுபத்து நாலாம்; பிறவாற்றால் விகற்பிக்கப் பலவாம்.

66

(கட்டளைக் கலித்துறை)

'மூன்றடி யானும் முடிந்தடி தோறும் முடிவிடத்துத்

தான்றனிச் சொற்பெறும் தண்டா விருத்தம்; வெண்டாழிசையே ஆன்றடி யாய்வெள்ளை போன்றிறும் ; மூன்றிழி பேழுயர்வாய் ஆன்றடி தாஞ்சில அந்தம் குறைந்திறும் வெண்டுறையே” - யா. கா. 27. இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக்

கொள்க.

69.

வெண்பாவும் அதன் இனமும் முடிந்தன.

ஆசிரியப்பா

அகவல் இசையன அகவல்; மற்றவை

ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே.

(கரு)

'இஃது என் நுதலிற்றோ?' எனின், முறையானே ஆசிரியப்பா ஆமாறு, பொதுவகையான் உணர்த்துதல் நுதலிற்று.