உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

ஃது

இளங்குமரனார் தமிழ் வளம் – 13 ♡

மாயிருந் தானை 'மயிடன் றலையின்மேல் - அம்மானாய் ! பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய் !”

து அடிமறியாய் வாராமையின், நிலை வெளி விருத்தம். (அடி மறி மண்டில வெளி விருத்தம்)

66

“உற்ற படையினார் பெற்ற பகையினார் - புறாவே! பெற்றம் உடையார் பெருஞ்சிறப் பாண்டகை - புறாவே! மற்றை யவர்கள் மனையிற் களிப்பதோ - புறாவே?”

எனவும்,

66

ஆடு 'கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே - எந்தைகுன்றம் ; நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே - எந்தைகுன்றம்; கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே - எந்தைகுன்றம்

எனவும் இவை மூன்றடியாய் வந்த அடி மறி மண்டில வெளி விருத்தம்.

66

(நிலை வெளி விருத்தம்)

ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ்ப் - புறாவே!

வேதங்கள் நான்கும் 3விரித்தான் விரைமலர்மேற் - புறாவே! பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே!’

இது மூன்றடியால் வந்த நிலை வெளி விருத்தம்.

66

பிறரும் இலக்கணம் இவ்வாறே சொன்னார். என்னை? "ஒரு மூன் றொருநான் கடியடி தோறும் தனிச்சொற் றழுவி நடப்பன 4வெள்ளை விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே”

என்றார் காக்கைபாடினியார். “நான்கு மூன்றடி தோறும் தனிச்சொல் தோன்ற வருவன வெளிவிருத் தம்மே”

என்றார் சிறுகாக்கைபாடினியார். "மூன்று நான்கடி தோறும் தனிச்சொற் *கொளீஇய எல்லாம் வெளிவிருத் தம்மே’

என்றார் அவிநயனார்.

66

மூவடி யாகியும் நாலடி யாகியும்

பாவடி வீழ்ந்து பாடலுள் நடந்தும்

கடிவரை விலவாய் அடிதொறும் தனிச்சொல்

திருத்தகு நிலைய விருத்த மாகும்

99

யா. கா. 27. மேற்.

1. மகிடாசுரன். 2. மூங்கில். 3. அருகதேவன். 4. வெளிவிருத்தம். (பா. வே) *கொளுவிய.