உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

287

'இறுதி' என்பது, ‘மூன்றடி முதலா ஏழடி காறும் (யா. வி. 67) என்னும் சூத்திரத்தினின்றும் அதிகாரம் வருவித்து உரைக்கப் பட்டது.

அடிதொறும் தனிச்சொற்கொளின் வெளி விருத்தம்மே,' என்னாது, ‘தான்’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், தனிச் சொல்லை அடி உட்படச் சொன்னால் இயைபுத் தொடையாம்; இஃது அப்பெற்றியன்றியே வேறாய் வந்தது போலும் இங்குத் 'தனிச்சொல்லாவது' என்று அடியுட்படாதே பிரித்து அலகிட்டு வழங்கப்படும். அல்லாது, அடிதொறும் பொருள் அற்று மண்டிலமாய் வருவன ‘அடிமறி மண்டில வெளி விருத்தம்’ என்றும். அல்லாதன 'நிலை வெளி விருத்தம்' என்றும் வழங்கப்படும் எனக் கொள்க.

6

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(அடி மறி மண்டில வெளி விருத்தம்) “சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்; 'புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்;

கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல்- எஞ்ஞான்றும்; நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்’

எனவும்,

ஆவா !' என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்; கூகூ! என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்;

!

மாமா ! என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்;

ஏகிர் நாகீர் ! என்செய்தும் ! என்றார் -ஒருசாரார்; -யா. கா. 27. 41. மேற். எனவும்,

"மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியும் - எந்தைகுன்றம்; காலை 'மணிக்குவளை காதலர் கண்விழிக்கும் - எந்தைகுன்றம் நீல மழைமுழங்கி நின்று சிலம்பதிரும் - எந்தைகுன்றம் ஆலி மயிலகவ *அந்தண் டுவனமே - எந்தைகுன்றம்”

6 எனவும் இவை நான்கு அடியாய், அடிதோறும் பொருள் அற்று அடிமறியாய் வந்தமையால், அடிமறி மண்டில வெளி விருத்தம். (நிலை வெளி விருத்தம்)

1.

“சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ - “அம்மானாய் ! ஆய்மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும்-அம்மானாய்!

பொருந்தாதிருப்பாயாக. சொல்லல், புல்லல், கொல்லல், நில்லல் எதிர்மறைகள். 2. காட்டு மல்லிகை. 3. கருங்குவளை. 4. அன்னையே. (பா. வே) *வந்தன்று வானமே.