உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்து நின் றாரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே"

இஃது ஏழடியாய், முதலிரண்டடியும் அறுசீராய், ஓரோ சையால் வந்து, பின் ஐந்தடியும் நாற்சீராய், வேறோர் ஓசையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

66

என்னை?

'அடியைந் தாகியும் மிக்கும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்தப வரினும், வெண்டுறை என்னும் விதியின வாகும்

என்றார் காக்கைபாடினியார். “பெற்றவடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய் இற்ற அடியும் ஈற்றயல் அடியும் ஒன்றும் இரண்டும் நின்ற *தனசீர் கண்டன குறையின் வெண்டுறை யாகும்’

என்றார் மயேச்சுரர்

“ஐந்தா றடியின் நடந்தவும் அந்தடி 'ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும் வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே'

என்றார் அவிநயனார்.

இவர்களும் விதப்பான்* மூன்றடி முதலா ஏழடிகாறும் இவ்வாறே உடன்பட்டார் எனக் கொள்க.

வெளி விருத்தம்

௬அ. நான்கடி யானும் நடைபெற் றடிதொறும்

தான்றனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே.

(கச)

ச்சூத்திரம், வெளி விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்.) நான்கு அடியானும், நடைபெற்று- நான்கு அடியால் வந்து, (‘நான்கு அடியானும்’ என்ற உம்மையான், மூன்று அடியானும் அருகி வரப்பெறும் எனக் கொள்க), அடிதொறும் தான் தனிச்சொல் கொளின் வெளிவிருத்தமே - அடிதொறும் இறுதிக்கண் ஒரு சொல்லே தனிச்சொல்லாய்ப் பொருள் கொண்டு முடியின் 'வெளி விருத்தம்' எனப்படும் என்றவாறு.

1. இறுதியில் ஒன்றிரண்டு சீர்குறைதலும். (பா. வே) *வதன்சீர். *8இச் சூத்திரங்களால்.

-