உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும் உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மன் செறிவுறும் *எழிலினர் சிறந்தவர் இவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்

பிறபிற நிகழ்வன பின்

285

யா. கா. 27. மேற்.

து ஐந்தடியாய், ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

66

(வேற்றொலி வெண்டுறை)

“கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற்

கருமம் யாதாம்?

இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே 'ஏமுற்றால்

இயைவ தென்னாம்?

பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதையப் பூண்டாலும்

பொலிவ தென்னாம்?

புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே? அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?

இஃது ஐந்தடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை.

66

'முழங்கு களியானே மூரிக் கடற்படை 3முறித்தார் மன்னர்

வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் 4விண்ணன் செழுந்தண்பூம் ‘பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய

எழுந்த°சே திகத்துள் இருந்தவண் ணல்லடி

விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத் தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ

இஃது ஆறடியாய். முதலடி இரண்டும் அறுசீராய், பின் நான் கடியும் நாற்சீராய், முதலிரண்டடியும் ஓர் இசையாய், பின் நான்கடியும் மற்றோர் இசையாய் வந்தமையால், வேற்றொலி வெண்டுறை எனப்படும்.

1.

“முழங்குதிரைக் கொற்கை வேந்தன்

முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான்

வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன்

தாக்கரிய வைவேல் பாடிக்

கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்

இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்

தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்

இறுமாப்புற்றால். 2. பெருமை; வலிமை. 3. தளிர்மலை. 4. பாட்டுடைத் தலைவன் பெயர். 5. பழையாறை (சோழர் தலைநகர்). 6. சினாலயம். (பா. வே) *தகையினர் சிறந்தனர்.