உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“அடிமூன் றாகி வெண்பாப் போல இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை” என்றார் சிறுகாக்கைபாடினியார். “அடிமூன் றாகி வெண்பாப் போல

இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை

என்றார் அவிநயனார்.

வெண்டுறை

சுஎ. மூன்றடி முதலா ஏழடி காறும்வந்

தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும்

வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்.

(55502)

இச்சூத்திரம், வெண்டுறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) மூன்று அடி முதலாக ஒன்று தலைச் சிறந்து ஏழடிகாறும் வந்து, கடைக்கண் ஓரடியும் பல அடியும் ஒரு சீரும் இரு சீரும் பல சீரும் குறைந்து, அவை எல்லாம் ஓர் இசையாய் வரினும் ; முதல் ஓர் இசையாய்ப் பின் ஓர் இசையாய் வரினும், வெண்டுறையாம் என்றவாறு.

அவற்றை ஓரொலி வெண்டுறை என்றும் வேற்றொலி வெண்டுறை என்றும் வழங்குப.

766

வரலாறு:

(ஓரொலி வெண்டுறை)

'தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால்

என்னாம் என்னாம்

யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடி ரண்டும்

பீலிபோற் சாய்த்து விடும்பிளிற்றி யாங்கே”

யா. கா. 27. மேற்.

இது மூன்றடியாய், ஈற்றடி இரண்டும் இரு சீர் குறைந்து வந்த ரொலி வெண்டுறை.

66

குழலிசைய வண்டினங்கள் கீகோழிலைய செங்காந்தட்

6

குலைமேற் பாய,

அழலெரியின் மூழ்கினவால் அந்தோ ! 'அளிய !' என் றயல் வாழ் மந்தி

கலுழ்வன போல் ‘நெஞ்சகைந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்'

யா. கா. 27. மேற்.

இது நான்கடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை

1. முயற்சியில்லாதார். 2. வளமான இலைகளையுடைய. 3. இரங்கத்தக்கன. 4. மனம் வருந்தி.