உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

'சலங்கா ரணமாகச் 'சங்குவாய் வைத்தான்; 3தாயலாள் 4வீய ‘நஞ் சங்குவாய் வைத்தான்; துலங்காச்சீர்த் தானவரைத் °துன்னத்தா னட்டான்; துன்னுவார்க் கின்னமிர்தம் தின்னத்தா 7னட்டான்; இலங்கா புரத்தார்தம் கோமனை 8எய்தான் ;

ஏத்தாதார் நெஞ்சத்துள் எஞ்ஞான்றும் எய்தான்

313

இவை எல்லா அடியும் முதல் நடு இறுதியாகச் சொன்னாலும் பொருள் கொண்டு நிற்குமாகலின், ஆசிரிய மண்டில விருத்தம். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

66

(வெண்டளைக் கலித்துறை) “தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன நான்கடியாய் எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே சுருக்கடி யாயும் துறையாம் ; குறைவில்தொல் சீரகவல் விருத்தம் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே!” இக்காரிகையை விரித்து உரைத்துக்கொள்க. “அறுசீர் முதலா நெடியவை எல்லாம்

66

நெறிவயின் திரிய நிலத்தவை நான்காய் விளைகுவ தப்பா இனத்துள விருத்தம்”

என்றார் காக்கைபாடினியார்.

“அறுசீர் எழுசீர் அடிமிக வரூஉம் முறைமைய நாலடி விருத்தம் ஆகும்”

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

"அறுசீர் எழுசீர் அடிமிக நின்றவும் குறைவில் நான்கடி விருத்தம் ஆகும்”

என்றார் அவிநயனார்.

66

ஆறு முதலா எண்சீர் காறும்

கூறும் நான்கடி ஆசிரிய விருத்தம்”

யா. கா. 29.

என்றார் பிறை நெடுமுடிக் கறைமிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்.

ஆசிரியத்து இனமாகிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றும். ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத் தாழிசை,

1. பகை, போர். 2. சங்கு வாய் வைத்தான். (பாரதப் போரில்). 3. தாய் அலாள்- பூதகி என்பாள். 4. சாக. 5. நஞ்சு அங்கு வாய் வைத்தான். 6. அம்பேவித் துளைத்தலால் அழித்தான். 7. ஆக்கித்தந்தான். 8. அம்பு எய்தான். 9. வாரான்.